பொய்யான உறவு கவிதைகள் - Poiyana Uravu kavithaikal in Tamil
மரணத்தை விட கொடூரமானது.. நாம் நேசிப்பவர் நம்மை வெறுப்பதும் மறப்பதும்..!
பொய்யான உறவு கவிதைகள் பற்றி · About
நம்பியவர்கள் மாறும்போது ஏற்படும் ஏமாற்றத்தையும் வலியையும் பேசும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் உள்ளன. போலியான உறவுகளை அடையாளம் கண்டு, மனதைக் காத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்ற பாடத்தையும் இவை தருகின்றன. உறவில் ஏமாற்றம் அடைந்த தருணங்களில் தங்கள் உணர்வைச் சொல்ல…
22 பொய்யான உறவு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொய்யான உறவு கவிதைகள்
உணர்வுகளற்ற உறவுகளிடம் உறவு கொண்டாடுவதை விட உதறி செல்வது சிறப்பு.
தேவையில்லாத ஒன்றுக்கும் தேவையில்லாதவர்களுக்கும் முக்கியத்துவம் எப்போது கொடுகின்றமோ.. அப்போதே வலியும் வேதனைகளுக்கும் நாமே வழியை ஏற்படுத்திக் கொள்கிறோம்.!
உண்மையை சொன்னால் கசப்பாக தான் இருக்கும் என்று சொல்லாமல் மறைப்பதால் நாம் பொய்யானவர்களாக மாறிவிடுகிறோம்.
வாழ்வின் முன்னேறி உயரச் செல்லுங்கள்.. தேவையென்றால் மட்டுமே கீழிறங்குங்கள்.. சிலருக்கு தேவைப்படும்போது நாம் தேடப்படுவோம் அதுவரை உயரவே இருப்போம்.
பொய்யான உறவுகளிடம் உண்மையான அன்பை கொடுத்து ஏமாந்தவர்கள் உண்மையான அன்பு கிடைத்தால் கூட அதை ஏற்றுக் கொள்வதற்கு தயங்குவார்கள்.. ஏனென்றால் அவர்கள் கடந்து வந்த பாதையில் அனுபவித்த வலிகள் ஏராளம்.!
பிடித்ததை செய்ய தடுப்பவர்களிற்கு அவர்களோடு பழகவோ சரி சமனாக கதைப்பதோ எத்தனிக்க கூடாது.. மாறாக விலகி இருப்பதும் அவர்களோடு உறவை அளவாக வைப்பதும் வாழ்க்கைக்கு சிறந்ததாக அமையும்.