Skip to content

Popular

P

Artist profile

Pushpavanam KuppusamyTamil Playback Singer – Song Lyrics & Movies

புஷ்பவனம் குப்புசாமி

About Pushpavanam Kuppusamy

புஷ்பவனம் குப்புசாமி (Pushpavanam Kuppusamy) என்றறியப்படும் குப்புசாமி தமிழ் நாட்டுப்புறப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். தன் மனைவி அனிதா குப்புசாமியுடன் இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள் என்னும் கிராமியப் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடவல்லவர். தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் விளங்குகிறார். சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.2026 அக்டோபரில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகப் பதவியேற்றார்.

மேலும் படிக்க ›

குப்புசாமி தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இளம் அறிவியலில் விலங்கியல் பட்டம் பெற்றார். பின்னர் குப்புசாமி சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றார். இவருக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் இசையில் ஆற்றிய பங்களிப்பிற்காகக் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர் பாடகியான அனிதாவை மணந்தார்.

இவர் தனது மனைவியுடன் அனிதாவுடன் சேர்ந்து இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏறத்தாழ 3000 நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவர் தனது இசையின் மூலம் சமூகச் செய்திகளை இணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அறியப்படுகிறார்.

இளையராஜா, வித்தியாசாகர், யுவன் சங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், ஜி. வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பல பிரபல இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படப் பாடல்களைப் குப்புசாமி பாடியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஏர்டெல் சூப்பர் சிங்கர் இளையோர் நிகழ்ச்சிகளில் நடுவர்களில் ஒருவராகப் பணியாற்றியுள்ளார் குப்புசாமி.

குப்புசாமியின் பாடல்கள் தமிழ்க் கலாச்சாரத்தின் படிமங்களை எளிய வார்த்தைகளில் அழகாக வெளிப்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.

Pushpavanam Kuppusamy is a Tamil folk singer, playback singer, lyricist, writer and music composer. He has been credited for reviving the Naatupura Paatu, a type of Tamil folk art. Together with his wife Anitha Kuppusamy, he has conducted several concerts of Tamil folk songs. The couple has jointly brought out several albums of authentic Tamil folk music. He has also written books on Tamil folk songs. He appears on TV channels like Sun TV, Vijay TV, and Makkal TV, performing musical shows. He is a recipient of the Kalaimamani award from the Government of Tamil Nadu.

Read full biography ›

Kuppusamy studied at Madras University and gained M.A., M.Phil., and a Ph.D. in music. He received his Ph.D. from Queen Mary's College, Chennai. Sathyabhama University gave an Honorary Doctorate to Kuppusamy for his contribution to music.

Along with his wife, he has performed around 3000 shows in India and abroad. He is known for his incorporation of social messages through his music.

Kuppusamy has sung film songs for many popular music directors, including Ilaiyaraaja, Vidyasagar, Yuvan Shankar Raja, Devi Sri Prasad, and G. V. Prakash Kumar.

Kuppusamy is one of the seasonal judges in Vijay TV hosted Airtel Super Singer and Airtel Super Singer Junior.

He is known for his audio casettes of tarkka paattu, a category of Tamil folk song.

Kuppusamy hails from a Tamil family from Nagapattinam district Vedaranyam. He did his schooling at

Vedaranyam S.K.S Government higher secondary School. He is married to Anitha Kuppusamy who is also a singer.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Pushpavanam Kuppusamy · Singers songs · 15

Pushpavanam Kuppusamy Movies List · திரைப்படங்கள் · 10

  1. Seethakaathi 2018 ♪ 4

    Seethakaathi

    சீதக்காதி

  2. Ammavin Kaipesi 2012 ♪ 2

    Ammavin Kaipesi

    அம்மாவின் கைபேசி

  3. Saguni 2012 ♪ 6

    Saguni

    சகுனி

  4. Thirupathi 2006 ♪ 6

    Thirupathi

    திருப்பதி

  5. february-14 2005 ♪ 6

    february-14

    பெப்ரவரி -14

  6. Maayavi 2005 ♪ 7

    Maayavi

    மாயாவி

  7. Perazhagan 2004 ♪ 5

    Perazhagan

    பேரழகன்

  8. Karisakattu Poove 2000 ♪ 7

    Karisakattu Poove

    கரிசக்காட்டு பூவே

  9. Desiya Geetham 1998 ♪ 8

    Desiya Geetham

    தேசிய கீதம்

  10. Kadhal Kavithai 1998 ♪ 7

    Kadhal Kavithai

    காதல் கவிதை

Worked with Pushpavanam Kuppusamy