Skip to content

Popular

Tamil Songs lyrics · 2004

Nenjam Ellam lyrics from Aaytha Ezhuthu movie - ஆயுத எழுத்து திரைப்படத்திலிருந்து நெஞ்சம் எல்லாம் காதல் பாடல் வரிகள்

நெஞ்சம் எல்லாம் காதல் பாடல் 2004-ல் வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: அட்னன் சமி கான்

Nenjam Ellam is a song from the 2004 Tamil film Aaytha Ezhuthu, written by Vairamuthu and sung by Adnan Sami.

WhatsApp
Year
2004
Lyrics
Vairamuthu
Singers
Adnan Sami

Lyrics(Tamil)

ஏய் ஏய் ஏய் ஓர் உண்மை சொன்னால்
ஏய் ஏய் ஏய் நேசிப்பாயா

நெஞ்சம் எல்லாம் காதல்
தேகமெல்லாம் காமம்
உண்மை சொன்னால் என்னை
நேசிப்பாயா

காதல் கொஞ்சம் கம்மி
காமம் கொஞ்சம் தூக்கல்
மஞ்சத்தின் மேல் என்னை
மன்னிப்பாயா

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

நேசிப்பாயா நேசிப்பாயா
நேசிப்பாயா நேசிப்பாயா
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
நீ தானே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு
வா சோகம் இனி நமக்கெதுக்கு
யார் கேக்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா
(நெஞ்சமெல்லாம்..)

காதல் என்னை வருடும் போதும்
உன் காமம் என்னை திருடும் போதும்
என் மனசெல்லாம் மார்கழி தான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அறியவில்லை
நான் அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை
(நெஞ்சமெல்லாம்..)

பாடல் பொருள் · About this song

நெஞ்சம் எல்லாம் காதல் ஒரு வெளிப்படையான, துணிச்சலான காதல் பாடல். "நெஞ்சம் முழுக்கக் காதல், உடல் முழுக்க ஆசை; இந்த உண்மையைச் சொன்னால் என்னை நேசிப்பாயா?" என்று நாயகன் தன் காதலியிடம் நேர்மையாகக் கேட்கிறான். மற்ற பெண்கள் மீது ஈர்ப்பு இருந்தாலும் தன் பித்து அவள் மீது மட்டும்தான் என்கிறான்.

அவள் பார்வை முதுகுத் தண்டில் மின்னலாகப் பாய்கிறது; "ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு" போன்ற நவீனச் சொற்களைப் பழைய தமிழ் உவமைகளோடு கலக்கிறது பாடல். மனம் மார்கழிக் குளிர்ச்சியாகவும், கனவுகள் கார்த்திகை தீப ஒளியாகவும் இருக்கின்றன. இறுதியில், "உன் குறைகள் எனக்குத் தெரியவில்லை; தெரிந்தாலும் சூரியனிலும் கறை உண்டு" என்று, குறைகளோடு சேர்த்தே அவளை ஏற்றுக்கொள்கிறான்.

Nenjam Ellam is a frank, modern love song. The singer admits that his heart is full of love and his body full of desire, and asks whether she will still love him for telling the truth. Fresh phrases like a "flood in the river of hormones" sit beside classic Tamil images of the cool Margazhi month and Karthigai lamps. He ends by accepting her as she is: even the sun is not spotless.

Nenjam Ellam song FAQ

Who sang Nenjam Ellam?

Nenjam Ellam was sung by Adnan Sami for the 2004 Tamil film Aaytha Ezhuthu.

Who wrote the lyrics of Nenjam Ellam?

The lyrics of Nenjam Ellam were written by Vairamuthu.

Which movie is the song Nenjam Ellam from?

Nenjam Ellam is from the Tamil film Aaytha Ezhuthu, released in 2004. The film has 8 songs on Tamilputhumai.

நெஞ்சம் எல்லாம் காதல் பாடலை பாடியவர் யார்?

நெஞ்சம் எல்லாம் காதல் பாடலை பாடியவர் அட்னன் சமி கான்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆயுத எழுத்து திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்