பாரதியார் பொன்மொழிகள்-Bharathiyar Ponmolikal in Tamil
எந்த ஒரு செயலைச் செய்யும் போதும் அச்சமில்லாது துணிவுடன் செய்யுங்கள்.
பாரதியார் பொன்மொழிகள் பற்றி · About
சுப்பிரமணிய பாரதியார் 'மகாகவி' என்று போற்றப்படும் தமிழ்க் கவிஞர்; விடுதலைப் போராட்ட வீரராகவும் சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளராகவும் விளங்கியவர். அவரது பொன்மொழிகள் தமிழின் பெருமை, மன உறுதி, அறத்தின் வலிமை, பெண் விடுதலை, நாட்டுப்பற்று ஆகியவற்றை உணர்ச்சியுடன்…
21 பாரதியார் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பாரதியார் பொன்மொழிகள்
கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி.
இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.
வாழ்க்கையில் எப்போதும், சமாதானத்தையும் சகிப்புத்தன்மையையும் நமது லட்சியமாக கொள்ள வேண்டும்.
பல பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்த கவிதை அன்று. கேட்பவன் உள்ளத்தில் கவிதை உணர்வை எழுப்பி விடுவதுதான் சிறந்த கவிதை!
இந்த உலகில் நீங்கள் சில காலம் தங்க வந்திருக்கும் விருந்தினர்தான். எனவே விருந்தாளின் வீட்டில் எப்படி கட்டுப்பாட்டுடனும் அடக்கத்துடனும் நடந்து கொள்வீர்களோ அதுபோலவே நடந்து கொள்ளுங்கள்.
இழிசெயல்கள் எதுவும் உங்களைப் பிடித்து தம்வழி இழுத்துக் கொண்டு செல்லாதபடி சதாகாலமும் விழிப்புடன் இருப்பீர்களாக, பயமின்றி உழையுங்கள். சலிப்புக்கு மட்டும் ஒருபோதும் இடம் கொடாதீர்கள்.