கன்பூசியஸ் பொன்மொழிகள்-confucius Ponmolikal in Tamil
உன்னத நெறிகளையும், உயர்ந்த மதியும், நேர்மையும் கொண்டவரே உயர்ந்த மனிதர்.
கன்பூசியஸ் பொன்மொழிகள் பற்றி · About
கன்பூசியஸ் பண்டைய சீனாவின் தலைசிறந்த தத்துவ ஞானியும் ஆசிரியருமாவார். அவரது போதனைகள் சீனப் பண்பாட்டிலும் கிழக்காசியச் சிந்தனையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இப்பக்கத்தில் உள்ள அவரது பொன்மொழிகள் ஒழுக்கம், அறிவு, பணிவு, தவறுகளைத் திருத்திக்கொள்ளுதல்,…
38 கன்பூசியஸ் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
கன்பூசியஸ் பொன்மொழிகள்
நீ வாயைத் திறக்கும் போதெல்லாம் உன் உள்ளத்தைத் திறக்கிறாய். ஆகவே, கவனமாக இரு.
கோபம் தலைதூக்கும்போது, அதன் பின்விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள்.
மனித சமூகம் மதிக்காதிருந்தபோதும் மனம் மாறாதிருப்பதே மாட்சி.
உங்களுக்கு எதை மற்றவர் செய்தால் நீங்கள் அதை விரும்பமாட்டீர்களோ அதை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள்.
சிறந்த மனிதத் தன்மை அல்லது மேன்மைக்குணம் என்பது தொடுவானத்தில் எட்டாத தொலைவில் இருக்கின்ற இலட்சியம் அல்ல. நீங்கள் விரும்பினால் போதும் அது உங்கள் கைக்கு எளிதாக கிடைத்துவிடும்.
உயர்ந்த குணமுள்ள மனிதன் தான் எதைப்பற்றி யாரிடம் பேசுகிறோம் என்பதைக் குறித்து மிகுந்த கவனம் செலுத்துவான்.