விவேகானந்தர் பொன்மொழிகள்-Swami Vivekananda Ponmolikal in Tamil
இந்த உலகம் பெரியதொரு பயிற்சிக் கூடம். நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே இங்கு வந்திருக்கிறோம்.
விவேகானந்தர் பொன்மொழிகள் பற்றி · About
சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மிகத் துறவி; ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான அவர் வேதாந்தக் கருத்துகளை உலகெங்கும் பரப்பி, ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவர். அவரது பொன்மொழிகள் தன்னம்பிக்கை, மன வலிமை, கல்வி, சேவை ஆகியவற்றை இளைஞர்களிடம்…
64 விவேகானந்தர் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
விவேகானந்தர் பொன்மொழிகள்
இன்னும் நாம் செய்யவேண்டிய வேலைகளையெல்லாம் செய்ய ஆற்றல் பெறவேண்டுமா? முதலில் பொறாமையை ஒழியுங்கள்.
இதயமில்லாமல் வெறும் புத்திக்கூர்மை மட்டுமிருந்தால் அது ஒருவனை சுயநலக்காரனாக மாற்றிவிடும்.
மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மதத்தின் அடிப்படை இலட்சியமாகும்.
வாழ்வின் லட்சியம் இன்பம் என்று எண்ணி நாம் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், அறிவுதான் நம் வாழ்வின் உண்மையான லட்சியம்.
நான் எதையும் சாதிக்க வல்லவன், என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகி விடும்.
நன்மையைப்போலவே தீமையிலிருந்தும் மனிதன் பெரும் பாடங்களைக் கற்றுக் கொள்கிறான்.