வாழ்கை தத்துவ கவிதைகள் - Valkai Thathuva kavithaikal in Tamil
தியாகம் தான் வாழ்க்கை, இது இயற்கை கற்றுத் தந்த பாடம்
வாழ்கை தத்துவ கவிதைகள் பற்றி · About
வாழ்க்கையின் உண்மைகளையும் அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்களையும் சுருக்கமாகச் சொல்லும் தத்துவக் கவிதைகள் இங்கே உள்ளன. மனிதர்களின் இயல்பு, பொறுமை, நல்ல குணம் போன்றவற்றைப் பற்றிச் சிந்திக்க இவை தூண்டுகின்றன. ஆழமாக யோசிக்கும் தருணங்களிலும், பிறருக்கு வாழ்க்கைப்…
179 வாழ்கை தத்துவ கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்கை தத்துவ கவிதைகள்
வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
மனிதன் தனக்கு அநியாயம் இழைக்கும் முழு உலகத்தையும் எதிர்த்து நிற்க முடியும். ஆனால்,தான் அநியாயமாக நடத்தும் ஒருவனின் எதிரில் நிமிர்ந்து நிற்கவே முடியாது.
இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே!
முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே, உலகை மாற்றத் தகுதி உடையவன்!’
காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒரு நாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது!
கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன்