தமிழ் மோட்டிவேஷனல் Quotes - Motivational Quotes in Tamil
கீழே விழாமல் இருப்பதில் பெருமையில்லை. விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருப்பதே பெருமை!
தமிழ் மோட்டிவேஷனல் Quotes பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள ஊக்கமூட்டும் வரிகள் நம்பிக்கை, முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றன. சோர்வான நேரத்தில் மனதை உற்சாகப்படுத்தி, இலக்கை நோக்கி மீண்டும் நடக்கத் தூண்டுகின்றன. தேர்வு, வேலை, புதிய தொடக்கம் போன்ற தருணங்களில் நண்பர்களுக்கும்…
355 தமிழ் மோட்டிவேஷனல் Quotes ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
தமிழ் மோட்டிவேஷனல் Quotes
துக்கத்தால் தற்கொலை செய்து கொள்பவன் தைரியசாலி என்றால், அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொள்கிறவனோ பெரும் வீரன்
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது
கடவுள் நம்பிக்கை உள்ளவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. உனக்குப் பயம் ஏற்பட்டால், அது கடவுள் மேல் உனக்கிருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது.
நீ உயர்ந்து மேலே செல்லச் செல்ல, இன்னும் கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாய்த் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. அதனால், அவர்கள் உன் முயற்சிகளைப் பற்றி எள்ளி நகையாடினால், கண்டு கொள்ளாதே.
உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு. சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர்.