வாழ்கை தத்துவ கவிதைகள் - Valkai Thathuva kavithaikal in Tamil
நம்மால் இந்த வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் மாற்றிவிட முடியாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்கை தத்துவ கவிதைகள் பற்றி · About
வாழ்க்கையின் உண்மைகளையும் அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்களையும் சுருக்கமாகச் சொல்லும் தத்துவக் கவிதைகள் இங்கே உள்ளன. மனிதர்களின் இயல்பு, பொறுமை, நல்ல குணம் போன்றவற்றைப் பற்றிச் சிந்திக்க இவை தூண்டுகின்றன. ஆழமாக யோசிக்கும் தருணங்களிலும், பிறருக்கு வாழ்க்கைப்…
179 வாழ்கை தத்துவ கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்கை தத்துவ கவிதைகள்
நம் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளும் துன்பங்களுக்கும் நமக்கு பாடமாக வந்தவை மட்டுமே.
இந்த வாழ்க்கையில் நாம் ஆசைப்பட்டபடி அனைத்தும் நடப்பதில்லை இயற்கையின் விதிப்படியே நடக்கிறது.
காரண காரணம் இன்றி நம் வாழ்க்கையில் எதுவும் நடக்காது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு தொந்தரவுகளும் துன்பங்களும் நம்மை மேம்படுத்தும் ஒரு நல்ல எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி.
கடந்து போன விஷயங்களை மறந்து விடுங்கள் அவை சென்றுவிட்டதை நம்மால் மாற்ற இயலாது.
ஆசைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள் எதிர்பார்ப்புகளை மறைத்துக் கொள்ளுங்கள் பேராசை படாதீர்கள் இதுவே வாழ்க்கை வெற்றிக்கான மந்திரம்.