நட்பு கவிதைகள் - Friendship kavithaikal in Tamil
இந்த உலகம் உங்களை விட்டுச் செல்லும் போது உங்களை தேடி வரும் அவனே உண்மையான நண்பன்.
நட்பு கவிதைகள் பற்றி · About
இந்தப் பக்கத்தில் உள்ள கவிதைகள் உண்மையான நட்பின் அருமையையும் நம்பிக்கையையும் பேசுகின்றன. இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுக்கும் நண்பனின் மதிப்பையும், நட்பில் துரோகம் தரும் வலியையும் இவை எளிய வரிகளில் சொல்கின்றன. நண்பர்கள் தினம், பிறந்தநாள், நீண்ட நாள்…
86 நட்பு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
நட்பு கவிதைகள்
உன் நண்பர்களைக் காட்டு. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.
பெருமைக்காரன் கடவுளை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான்.
எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.