காதல் வலி கவிதைகள் - love Pain kavithaikal in Tamil
இந்த ஏமாற்றத்திற்கும் வலிக்கும் காரணம் நான் அன்று உனக்காக என்னை மாற்றிக் கொண்டது.
காதல் வலி கவிதைகள் பற்றி · About
பிரிவு, நிறைவேறாத எதிர்பார்ப்பு, உடைந்த காதல் ஆகியவற்றின் வலியைப் பேசும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் உள்ளன. மனதுக்குள் அடக்கி வைத்த சோகத்திற்கு இந்த வரிகள் குரல் கொடுக்கின்றன. காதல் தோல்வி அல்லது பிரிவின் நேரத்தில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வாசகர்கள்…
90 காதல் வலி கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் வலி கவிதைகள்
என் காதல் இணையாது என்று தெரிந்தும் சேர்த்து வைத்து கொள்கிறது இந்த கனவும் கற்பனையும்.
எளிதாக நீ என்னை விட்டு மறைந்து கொண்டாய் அப்படியே என்னிடம் சொல்லிவிட்டு போய் இருக்கலாமே.
எரிந்தாலும் சேர்ந்து எரியும் நெருப்பாய் உன் ஞாபகங்கள் என்னோடு.
பலவித மாற்றங்களில் என்றுமே மாறாத மாற்றமாய் இருக்கிறது உன் நினைவுகள் மட்டுமே.
தொடமுடியாத தூரத்தில் இருந்தாலும் என்னை கட்டி அணைத்துக் கொள்கிறது உன் உணர்வுகள்.
நீ தயக்கமின்றி தந்த முத்தம் எல்லாம் இப்பொழுது தயக்கத்துடன் என் விழி முன் வந்து வந்து போகிறது.