இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
ரோஜா பூவே என் காதலுக்கு தூதுவராக மாற துடிக்கிறாய் என் காதலியின் கூந்தலுக்குள் இடம்பிடிக்க வருகிறாய்
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
வண்ணத்துப்பூச்சியாய் வசியம் செய்கிறாய் வழியில் படுத்து உண்ணாவிரதம் செய்கிறாய் உனக்காகத்தானே விழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன் என சொல்கிறாய்
செங்கதிரவனின் உதிரத்தை குடிக்கிறாய் சேர்த்து வைத்த உயிரை வண்டுக்கு கொடுக்கிறாய் தினம் உன் சினுங்களால் வசியம் செய்கிறாய் என் மனதை!
பல வண்ண முகம் காட்டி பஞ்சவர்ண இதழ்கள் விரித்து பஞ்சமின்றி சிரிக்கின்றாய்! நெஞ்சமெல்லாம் இனிகின்றாய்!
மனித இறப்பிலும் மலர் மாலையை அழகு சேர்ப்பது நீதான் பூவே.
பூத்து விட்ட சோலையில் நீ கொடுத்து வைத்த மாலையில் நீ சேர்த்து வைத்த கூந்தலில் நீ காத்து வரும் கடவுளில் நீ.
காற்று வந்து உன் முகம் வருட சற்று நாணம் கொண்டாயோ அங்கும் இங்கும் அசைந்து அழகு நடனம் புரிந்தாயோ