இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
அதிகாலை நேரத்தில் ஆண்டவனை விட ஆதவனே கண்ணுக்கு தெரிகிறான்.
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
முகம் கழுவியது மேகம், சுத்தமாகிறது பூமி. இப்படிக்கு மழை.
கொட்டித்தீர்த்த கோடை மழை குடை பிடிக்கும் காளான்கள்.
வானம் கருமேக காகிதத்தில் விடிய விடிய எழுதி தூக்கி போட்ட மழை கவிதைகளை படித்து விட்டு பூமியே குளிர்ந்து போனது.
தெற்கிலிருந்து தென்றல் காற்றாய் வந்தாய் வடக்கிலிருந்து வாடை காற்றாய் வந்தாய் கிழக்கில் இருந்து கொண்டல் காற்றாய் வந்தாயே மேற்கிலிருந்து மேலை கற்றாய் வந்தாய்.
நீ மழைச்சாரலாய் வந்து குளிரில் மலர்களை நடுங்க வைத்து வேடிக்கை பார்க்கிறாய் உன் வருகையிலே இசைத்திடும் கீதம் ஸ்வரங்களில் எட்டாவது ராகமோ!
நீ வந்தால் அனைவரும் சிரிப்பார்கள் நீ தொட்டால் அனைவரும் சிலிர்ப்பார்கள்.