இயற்கை கவிதைகள் - Iyarkai kavithaikal in Tamil
காகிதக் கப்பல் விட்டு மழையில் ஆடியதும் கருப்பட்டி காப்பியை கடும் மழையில் தேடியதும் பல காலங்கள் ஆனாலும் மறப்போமா?
இயற்கை கவிதைகள் பற்றி · About
நிலவு, வெயில், மழை, மண் எனப் பருவங்களையும் இயற்கையின் பல முகங்களையும் வர்ணிக்கும் கவிதைகள் இங்கே உள்ளன. இயற்கையின் அழகோடு, அதன் கடுமையையும் மண்ணின் மொழியில் இந்த வரிகள் படம்பிடிக்கின்றன. பருவ மாற்றங்களின் போதும் இயற்கையை ரசிக்கும் தருணங்களிலும் வாசகர்கள்…
153 இயற்கை கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
இயற்கை கவிதைகள்
கானல் நீருக்குள் கட்டுண்ட பூமிதனை அர்ச்சனை அரிசி போல அவ்வப்போது தூவித்தொடு.
பானையில் உனைவீழ்த்தி இனிமேல் நான் குடிப்பேன் தேனி இல்லை இனி உன்னை கூட செயற்கையாய் தான் படைப்பேனோ!
மாதம் மும்மாரி மழை பொழிந்த காலம் போச்சு! திரைப்படங்கள் கூட இன்று மழை காட்சியை மறந்து போச்சு!
கைபேசி காதல் போல மழைக் காலமும் மாறி போச்சு! முத்தமும் மொத்தமும் முகம் காட்டாமலே முடிஞ்சு போச்சு!
வானத் தேன்தட்டில் வடிகின்ற தேன்துளியே! மேக கிளை முறிந்து பூமி வந்த நீர் கனியே!
உன்னை ரசிக்கத் தெரிந்த என்னை உரசிப் பார்க்க வந்தாயே! தொட்டு சென்ற நீ - உன் குளிர்ச்சியை மட்டுமே விட்டு சென்றது ஏனோ.