அப்பா கவிதைகள் - Appa kavithaikal in Tamil
பலரது வாழ்வில் கடைசிவரை புரிந்துகொள்ள முடியாத புத்தகம் அப்பா.
அப்பா கவிதைகள் பற்றி · About
தந்தையின் அமைதியான அன்பையும், குடும்பத்திற்காக அவர் சுமக்கும் பொறுப்பையும் பேசும் கவிதைகள் இங்கே உள்ளன. வெளியே காட்டாவிட்டாலும் உள்ளுக்குள் ஆழமாக இருக்கும் அப்பாவின் பாசத்தை இந்த வரிகள் உணர்த்துகின்றன. தந்தையர் தினம் அல்லது அப்பாவை நினைக்கும் தருணங்களில்…
48 அப்பா கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
அப்பா கவிதைகள்
தாங்கி பிடிக்க அம்மாவும் தூக்கி நிறுத்த அப்பாவும் இருக்கும் வரை யாரும் வீழ்ந்தது இல்லை.
உன் அப்பாவின் கஷ்டம் தெரிய வேண்டுமானால் அவர் இரவு தூங்கும் பொழுது அந்த சுருங்கிய முகத்தையும் ஆழ்ந்த உறக்கத்தையும் பார்.
தன் தலைக்கு மேலே உட்கார வைத்து நம்மை அழகு பார்க்கும் அப்பாவை நாம் ஒருபோதும் தலைகுனிய வைத்து விடக்கூடாது.
தன் மூச்சு உள்ளவரை என்னை நேசிப்பவர் எனக்காக சுவாசிப்பதும் என் அப்பா மட்டுமே.
ஓலைக்குடிசையில் பிறந்த தன் மகனுக்கு கோடீஸ்வரன் என்று பெயர் வைத்து அழகு பார்த்தவர் அப்பா.
அடித்தாலும் அன்பால் அணைக்கும் ஒரே ஜீவன் என் அப்பா.