காதல் வலி கவிதைகள் - love Pain kavithaikal in Tamil
நினைவாக நீ இருக்கும் வரையிலும் நிம்மதி என்பது எனக்கில்லை.
காதல் வலி கவிதைகள் பற்றி · About
பிரிவு, நிறைவேறாத எதிர்பார்ப்பு, உடைந்த காதல் ஆகியவற்றின் வலியைப் பேசும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் உள்ளன. மனதுக்குள் அடக்கி வைத்த சோகத்திற்கு இந்த வரிகள் குரல் கொடுக்கின்றன. காதல் தோல்வி அல்லது பிரிவின் நேரத்தில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வாசகர்கள்…
90 காதல் வலி கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் வலி கவிதைகள்
விடியலில் உதித்த ஒரு காதல் என் வாழ்க்கையை இருளில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கிறது.
மாற முடியாது என்று நீ சொல்லிய வார்த்தைகளும் பொய்யாகிவிட்டது.. நீ மாறி வேறு ஒருவனை காதலிக்கும்போது
பிரியும் முன் அந்த வலியை உணர முடிவதில்லை.. பிரிந்த பின் அந்த உலகத்தில் இருந்து வெளிவர முடியவில்லை.. முடிவு எதுவென்று தெரிவதில்லை.. தெரிந்தாலும் மாற முடிவதில்லை.
முன்பு உன்னோடு பேசிக்கொண்டு நாட்கள் நகர்ந்தன ஆனால் இப்போது உன் நினைவுகளோடு நாட்கள் நகர்கின்றது.
என் மனம் வலிப்பதற்கு காரணமும் நீ தான்.. அந்த வலிக்கு மருந்தும் நீ தான் அன்பே.!
சில காலங்களில் அனைத்தும் மாறிவிடும் என்று நான் நினைப்பது பொய் என்று பிரிவின் வலி மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.. காலம் தான் கடக்கிறது காதல் நெஞ்சில் உயிரோடு இருக்கிறது என்பதை என்னுள் புரிய வைக்கிறது.