பொய்யான உறவு கவிதைகள் - Poiyana Uravu kavithaikal in Tamil
உறவுகள் இரண்டு வகைப்படும் ஒன்று அன்பை தரும்.. மற்றொன்று அனுபவத்தை தரும்.. அன்பைத் தரும் உறவை மனதில் வை.. அனுபவத்தை தரும் உறவை நினைவில் வை.!
பொய்யான உறவு கவிதைகள் பற்றி · About
நம்பியவர்கள் மாறும்போது ஏற்படும் ஏமாற்றத்தையும் வலியையும் பேசும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் உள்ளன. போலியான உறவுகளை அடையாளம் கண்டு, மனதைக் காத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்ற பாடத்தையும் இவை தருகின்றன. உறவில் ஏமாற்றம் அடைந்த தருணங்களில் தங்கள் உணர்வைச் சொல்ல…
22 பொய்யான உறவு கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொய்யான உறவு கவிதைகள்
தேனைப் போன்று இனிமையாக பேசி.. தேளைப் போன்று கொட்டிவிட்டு செல்பவர்கள் அதிகம்.
யாரை நாம் உதாசீனப்படுத்துகிறமோ.. அவர் உதவியை வேண்டிச்செல்லும் நிலைமையை காலம் நிச்சயம் உணர்த்தும்.
நீ மேலே இருந்து பார்க்கும் போது மற்றவர்கள் சிறியவர்களாக தெரியலாம் ஆனால்.. நீயும் அவர்களில் ஒருவன் தான் என்பதை மறந்து விடாதே.!
ஒரு சிலரை பார்த்தவுடன் அவர்கள் மீது அன்பு வரும்.. பழகிய பின் உண்மையானவர்கள் என்று புரியும் போது மரியாதை வரும்.. அன்பு மலர்ந்து மரியாதையாக மிளிரும் போது மனதில் நம்பிக்கை தோன்றும்.!
சண்டையிடும் போது அமைதியாய் இருப்பவர்கள் தவறு செய்தவர்கள் அல்ல.. வார்த்தைகளை விட்டால் உறவு பிரியும் என்று உணந்தவர்கள்.