Skip to content

Popular

Psalms 67 · Tamil Bible

சங்கீதம் 67

சங்கீதம் – அதிகாரம் 67

7 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · Psalms chapters
  1. சங்கீதம் 67:1

    தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,

    God be merciful unto us, and bless us; and cause his face to shine upon us; Selah.

  2. சங்கீதம் 67:2

    தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா.)

    That your way may be known upon earth, your saving health among all nations.

  3. சங்கீதம் 67:3

    தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

    Let the people praise you, O God; let all the people praise you.

  4. சங்கீதம் 67:4

    தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள்.(சேலா.)

    O let the nations be glad and sing for joy: for you shall judge the people righteously, and govern the nations upon earth. Selah.

  5. சங்கீதம் 67:5

    தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக, சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

    Let the people praise you, O God; let all the people praise you.

  6. சங்கீதம் 67:6

    பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.

    Then shall the earth yield her increase; and God, even our own God, shall bless us.

  7. சங்கீதம் 67:7

    தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.

    God shall bless us; and all the ends of the earth shall fear him.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.