Skip to content

Popular

Psalms 116 · Tamil Bible

சங்கீதம் 116

சங்கீதம் – அதிகாரம் 116

19 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · Psalms chapters
  1. சங்கீதம் 116:1

    கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.

    I love the LORD, because he has heard my voice and my supplications.

  2. சங்கீதம் 116:2

    அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.

    Because he has inclined his ear unto me, therefore will I call upon him as long as I live.

  3. சங்கீதம் 116:3

    மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.

    The sorrows of death compassed me, and the pains of hell got hold upon me: I found trouble and sorrow.

  4. சங்கீதம் 116:4

    அப்பொது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியுமென்று கெஞ்சினேன்.

    Then called I upon the name of the LORD; O LORD, I plead to you, deliver my soul.

  5. சங்கீதம் 116:5

    கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மன உருக்கமானவர்.

    Gracious is the LORD, and righteous; yea, our God is merciful.

  6. சங்கீதம் 116:6

    கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்து போனேன், அவர் என்னை இரட்சித்தார்.

    The LORD perserves the simple: I was brought low, and he helped me.

  7. சங்கீதம் 116:7

    என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.

    Return unto your rest, O my soul; for the LORD has dealt bountifully with you.

  8. சங்கீதம் 116:8

    என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும் என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர்.

    For you have delivered my soul from death, mine eyes from tears, and my feet from falling.

  9. சங்கீதம் 116:9

    நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.

    I will walk before the LORD in the land of the living.

  10. சங்கீதம் 116:10

    விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன்.

    I believed, therefore have I spoken: I was greatly afflicted:

  1. சங்கீதம் 116:11

    எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.

    I said in my haste, All men are liars.

  2. சங்கீதம் 116:12

    கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.

    What shall I render unto the LORD for all his benefits toward me?

  3. சங்கீதம் 116:13

    இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

    I will take the cup of salvation, and call upon the name of the LORD.

  4. சங்கீதம் 116:14

    நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களுக்கு முன்பாகவும் செலுத்துவேன்.

    I will pay my vows unto the LORD now in the presence of all his people.

  5. சங்கீதம் 116:15

    கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.

    Precious in the sight of the LORD is the death of his saints.

  6. சங்கீதம் 116:16

    கர்த்தாவே, நான் உமது அடியேன், நான் உமது அடியாளின் புத்திரனும் உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன், என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர்.

    O LORD, truly I am your servant; I am your servant, and the son of yours handmaid: you have loosed my bonds.

  7. சங்கீதம் 116:17

    நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

    I will offer to you the sacrifice of thanksgiving, and will call upon the name of the LORD.

  8. சங்கீதம் 116:18

    நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும்,

    I will pay my vows unto the LORD now in the presence of all his people.

  9. சங்கீதம் 116:19

    கர்த்தருடைய ஆலயத்தின் பிராகரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலுூயா.

    In the courts of the LORD s house, in the midst of you, O Jerusalem. Praise all of you the LORD.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.