Skip to content

Popular

Psalms 100 · Tamil Bible

சங்கீதம் 100

சங்கீதம் – அதிகாரம் 100

5 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · Psalms chapters
  1. சங்கீதம் 100:1

    பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.

    Make a joyful noise unto the LORD, all you lands.

  2. சங்கீதம் 100:2

    மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.

    Serve the LORD with gladness: come before his presence with singing.

  3. சங்கீதம் 100:3

    கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.

    Know all of you that the LORD he is God: it is he that has made us, and not we ourselves; we are his people, and the sheep of his pasture.

  4. சங்கீதம் 100:4

    அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, and into his courts with praise: be thankful unto him, and bless his name.

  5. சங்கீதம் 100:5

    கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

    For the LORD is good; his mercy is everlasting; and his truth endures to all generations.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.