Skip to content

Popular

Psalms 128 · Tamil Bible

சங்கீதம் 128

சங்கீதம் – அதிகாரம் 128

6 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · Psalms chapters
  1. சங்கீதம் 128:1

    கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

    Blessed is every one that fears the LORD; that walks in his ways.

  2. சங்கீதம் 128:2

    உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.

    For you shall eat the labour of yours hands: happy shall you be, and it shall be well with you.

  3. சங்கீதம் 128:3

    உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.

    Your wife shall be as a fruitful vine by the sides of yours house: your children like olive plants round about your table.

  4. சங்கீதம் 128:4

    இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

    Behold, that thus shall the man be blessed that fears the LORD.

  5. சங்கீதம் 128:5

    கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.

    The LORD shall bless you out of Zion: and you shall see the good of Jerusalem all the days of your life.

  6. சங்கீதம் 128:6

    நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

    Yea, you shall see your children s children, and peace upon Israel.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.