Skip to content

Popular

Psalms 115 · Tamil Bible

சங்கீதம் 115

சங்கீதம் – அதிகாரம் 115

18 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · Psalms chapters
  1. சங்கீதம் 115:1

    எங்களுக்கு அல்ல, கர்த்தாவே எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும் உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.

    Not unto us, O LORD, not unto us, but unto your name give glory, for your mercy, and for your truth s sake.

  2. சங்கீதம் 115:2

    அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்.

    Wherefore should the heathen say, Where is now their God?

  3. சங்கீதம் 115:3

    நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.

    But our God is in the heavens: he has done whatsoever he has pleased.

  4. சங்கீதம் 115:4

    அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.

    Their idols are silver and gold, the work of men s hands.

  5. சங்கீதம் 115:5

    அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

    They have mouths, but they speak not: eyes have they, but they see not:

  6. சங்கீதம் 115:6

    அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.

    They have ears, but they hear not: noses have they, but they smell not:

  7. சங்கீதம் 115:7

    அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

    They have hands, but they handle not: feet have they, but they walk not: neither speak they through their throat.

  8. சங்கீதம் 115:8

    அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

    They that make them are like unto them; so is every one that trusts in them.

  9. சங்கீதம் 115:9

    இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

    O Israel, trust you in the LORD: he is their help and their shield.

  10. சங்கீதம் 115:10

    ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

    O house of Aaron, trust in the LORD: he is their help and their shield.

  1. சங்கீதம் 115:11

    கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.

    All of you that fear the LORD, trust in the LORD: he is their help and their shield.

  2. சங்கீதம் 115:12

    கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.

    The LORD has been mindful of us: he will bless us; he will bless the house of Israel; he will bless the house of Aaron.

  3. சங்கீதம் 115:13

    கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்.

    He will bless them that fear the LORD, both small and great.

  4. சங்கீதம் 115:14

    கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.

    The LORD shall increase you more and more, you and your children.

  5. சங்கீதம் 115:15

    வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

    All of you are blessed of the LORD which made heaven and earth.

  6. சங்கீதம் 115:16

    வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.

    The heaven, even the heavens, are the LORD s: but the earth has he given to the children of men.

  7. சங்கீதம் 115:17

    மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.

    The dead praise not the LORD, neither any that go down into silence.

  8. சங்கீதம் 115:18

    நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலுூயா.

    But we will bless the LORD from this time forth and for evermore. Praise the LORD.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.