Skip to content

Popular

Psalms 119 · Tamil Bible

சங்கீதம் 119

சங்கீதம் – அதிகாரம் 119

174 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · Psalms chapters
  1. சங்கீதம் 119:1

    கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.

    Blessed are the undefiled in the way, who walk in the law of the LORD.

  2. சங்கீதம் 119:2

    அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.

    Blessed are they that keep his testimonies, and that seek him with the whole heart.

  3. சங்கீதம் 119:3

    அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.

    They also do no iniquity: they walk in his ways.

  4. சங்கீதம் 119:4

    உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.

    You have commanded us to keep your precepts diligently.

  5. சங்கீதம் 119:5

    உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.

    O that my ways were directed to keep your statutes!

  6. சங்கீதம் 119:6

    நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.

    Then shall I not be ashamed, when I have respect unto all your commandments.

  7. சங்கீதம் 119:7

    உம்முடைய நீதி நியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.

    I will praise you with uprightness of heart, when I shall have learned your righteous judgments.

  8. சங்கீதம் 119:8

    உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.

    I will keep your statutes: O forsake me not utterly.

  9. சங்கீதம் 119:9

    வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே.

    Wherewithal shall a young man cleanse his way? by taking heed thereto according to your word.

  10. சங்கீதம் 119:10

    என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.

    With my whole heart have I sought you: O let me not wander from your commandments.

  1. சங்கீதம் 119:11

    நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

    Your word have I hid in mine heart, that I might not sin against you.

  2. சங்கீதம் 119:12

    கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.

    Blessed are you, O LORD: teach me your statutes.

  3. சங்கீதம் 119:13

    உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன்.

    With my lips have I declared all the judgments of your mouth.

  4. சங்கீதம் 119:14

    திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.

    I have rejoiced in the way of your testimonies, as much as in all riches.

  5. சங்கீதம் 119:15

    உமது கட்டளைகளைத் தியானித்து உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.

    I will meditate in your precepts, and have respect unto your ways.

  6. சங்கீதம் 119:16

    உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.

    I will delight myself in your statutes: I will not forget your word.

  7. சங்கீதம் 119:17

    உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்வேன்.

    Deal bountifully with your servant, that I may live, and keep your word.

  8. சங்கீதம் 119:18

    உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்.

    Open you mine eyes, that I may behold wondrous things out of your law.

  9. சங்கீதம் 119:19

    பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.

    I am a stranger in the earth: hide not your commandments from me.

  10. சங்கீதம் 119:20

    உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது.

    My soul breaks for the longing that it has unto your judgments at all times.

  11. சங்கீதம் 119:21

    உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.

    You have rebuked the proud that are cursed, which do go astray from your commandments.

  12. சங்கீதம் 119:22

    நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறேன்.

    Remove from me reproach and contempt; for I have kept your testimonies.

  13. சங்கீதம் 119:23

    பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.

    Princes also did sit and speak against me: but your servant did meditate in your statutes.

  14. சங்கீதம் 119:24

    உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது.

    Your testimonies also are my delight and my counsellors.leth.

  15. சங்கீதம் 119:25

    என் ஆத்துமா மண்ணோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

    My soul cleaves unto the dust: you restore life in me according to your word.

  16. சங்கீதம் 119:26

    என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

    I have declared my ways, and you heard me: teach me your statutes.

  17. சங்கீதம் 119:27

    உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும் அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.

    Make me to understand the way of your precepts: so shall I talk of your wondrous works.

  18. சங்கீதம் 119:28

    சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.

    My soul melts for heaviness: strengthen you me according unto your word.

  19. சங்கீதம் 119:29

    பொய்வழியை என்னை விட்டுவிலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.

    Remove from me the way of lying: and grant me your law graciously.

  20. சங்கீதம் 119:30

    மெய்வழியை நான் தெரிந்துகொண்டு உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.

    I have chosen the way of truth: your judgments have I laid before me.

  21. சங்கீதம் 119:31

    உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.

    I have stuck unto your testimonies: O LORD, put me not to shame.

  22. சங்கீதம் 119:32

    நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.

    I will run the way of your commandments, when you shall enlarge my heart.

  23. சங்கீதம் 119:33

    கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.

    Teach me, O LORD, the way of your statutes; and I shall keep it unto the end.

  24. சங்கீதம் 119:34

    எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.

    Give me understanding, and I shall keep your law; yea, I shall observe it with my whole heart.

  25. சங்கீதம் 119:35

    உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.

    Make me to go in the path of your commandments; for therein do I delight.

  26. சங்கீதம் 119:36

    என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்.

    Incline my heart unto your testimonies, and not to covetousness.

  27. சங்கீதம் 119:37

    மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.

    Turn away mine eyes from beholding vanity; and you restore life in me in your way.

  28. சங்கீதம் 119:38

    உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.

    Establish your word unto your servant, who is devoted to your fear.

  29. சங்கீதம் 119:39

    நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.

    Turn away my reproach which I fear: for your judgments are good.

  30. சங்கீதம் 119:40

    இதோ, உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.

    Behold, I have longed after your precepts: restore life in me in your righteousness.

  31. சங்கீதம் 119:41

    கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.

    Let your mercies come also unto me, O LORD, even your salvation, according to your word.

  32. சங்கீதம் 119:42

    அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன், உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.

    So shall I have wherewith to answer him that reproaches me: for I trust in your word.

  33. சங்கீதம் 119:43

    சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.

    And take not the word of truth utterly out of my mouth; for I have hoped in your judgments.

  34. சங்கீதம் 119:44

    நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.

    So shall I keep your law continually for ever and ever.

  35. சங்கீதம் 119:45

    நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால் விசாலத்திலே நடப்பேன்.

    And I will walk at liberty: for I seek your precepts.

  36. சங்கீதம் 119:46

    நான் உம்முடைய சாட்சிகளைக்குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.

    I will speak of your testimonies also before kings, and will not be ashamed.

  37. சங்கீதம் 119:47

    நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.

    And I will delight myself in your commandments, which I have loved.

  38. சங்கீதம் 119:48

    நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன். உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.

    My hands also will I lift up unto your commandments, which I have loved; and I will meditate in your statutes.

  39. சங்கீதம் 119:49

    நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.

    Remember the word unto your servant, upon which you have caused me to hope.

  40. சங்கீதம் 119:50

    அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது.

    This is my comfort in my affliction: for your word has quickened me.

  41. சங்கீதம் 119:51

    அகந்தைக்காரர் என்னை மிகவும், பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.

    The proud have had me greatly in derision: yet have I not declined from your law.

  42. சங்கீதம் 119:52

    கர்த்தாவே, ஆதிமுதலான உமதுநியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.

    I remembered your judgments of old, O LORD; and have comforted myself.

  43. சங்கீதம் 119:53

    உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது.

    Horror has taken hold upon me because of the wicked that forsake your law.

  44. சங்கீதம் 119:54

    நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின.

    Your statutes have been my songs in the house of my pilgrimage.

  45. சங்கீதம் 119:55

    கர்த்தாவே, இராக்காலத்திலும் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.

    I have remembered your name, O LORD, in the night, and have kept your law.

  46. சங்கீதம் 119:56

    நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது.

    This I had, because I kept your precepts.

  47. சங்கீதம் 119:57

    கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.

    You are my portion, O LORD: I have said that I would keep your words.

  48. சங்கீதம் 119:58

    முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும்.

    I implored your favour with my whole heart: be merciful unto me according to your word.

  49. சங்கீதம் 119:59

    என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.

    I thought on my ways, and turned my feet unto your testimonies.

  50. சங்கீதம் 119:60

    உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி நான் தாமதியாமல் தீவிரித்தேன்.

    I made haste, and delayed not to keep your commandments.

  51. சங்கீதம் 119:61

    துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும் உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.

    The bands of the wicked have robbed me: but I have not forgotten your law.

  52. சங்கீதம் 119:62

    உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம் உம்மைத் துதிக்கும்படி, பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.

    At midnight I will rise to give thanks unto you because of your righteous judgments.

  53. சங்கீதம் 119:63

    உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.

    I am a companion of all them that fear you, and of them that keep your precepts.

  54. சங்கீதம் 119:64

    கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

    The earth, O LORD, is full of your mercy: teach me your statutes.

  55. சங்கீதம் 119:65

    கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.

    You have dealt well with your servant, O LORD, according unto your word.

  56. சங்கீதம் 119:66

    உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன்.

    Teach me good judgment and knowledge: for I have believed your commandments.

  57. சங்கீதம் 119:67

    நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.

    Before I was afflicted I went astray: but now have I kept your word.

  58. சங்கீதம் 119:68

    தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

    You are good, and do good; teach me your statutes.

  59. சங்கீதம் 119:69

    அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.

    The proud have forged a lie against me: but I will keep your precepts with my whole heart.

  60. சங்கீதம் 119:70

    அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.

    Their heart is as fat as grease; but I delight in your law.

  61. சங்கீதம் 119:71

    நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.

    It is good for me that I have been afflicted; that I might learn your statutes.

  62. சங்கீதம் 119:72

    அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.

    The law of your mouth is better unto me than thousands of gold and silver.

  63. சங்கீதம் 119:73

    உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.

    Your hands have made me and fashioned me: give me understanding, that I may learn your commandments.

  64. சங்கீதம் 119:74

    நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.

    They that fear you will be glad when they see me; because I have hoped in your word.

  65. சங்கீதம் 119:75

    கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.

    I know, O LORD, that your judgments are right, and that you in faithfulness have afflicted me.

  66. சங்கீதம் 119:76

    நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.

    Let, I pray you, your merciful kindness be for my comfort, according to your word unto your servant.

  67. சங்கீதம் 119:77

    நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

    Let your tender mercies come unto me, that I may live: for your law is my delight.

  68. சங்கீதம் 119:78

    அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.

    Let the proud be ashamed; for they dealt perversely with me without a cause: but I will meditate in your precepts.

  69. சங்கீதம் 119:79

    உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.

    Let those that fear you turn unto me, and those that have known your testimonies.

  70. சங்கீதம் 119:80

    நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.

    Let my heart be sound in your statutes; that I be not ashamed.

  71. சங்கீதம் 119:81

    உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடψய வசனத்துக்குக் காத்திருΕ்கிறேன்.

    My soul faints for your salvation: but I hope in your word.

  72. சங்கீதம் 119:82

    எப்பொழுது என்னைĠύ தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.

    Mine eyes fail for your word, saying, When will you comfort me?

  73. சங்கீதம் 119:83

    புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.

    For I am become like a bottle in the smoke; yet do I not forget your statutes.

  74. சங்கீதம் 119:84

    உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்புச் செய்வீர்.

    How many are the days of your servant? when will you execute judgment on them that persecute me?

  75. சங்கீதம் 119:85

    உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.

    The proud have dug pits for me, which are not after your law.

  76. சங்கீதம் 119:86

    உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும்.

    All your commandments are faithful: they persecute me wrongfully; help you me.

  77. சங்கீதம் 119:87

    அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.

    They had almost consumed me upon earth; but I forsook not your precepts.

  78. சங்கீதம் 119:88

    உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்.

    Restore life in me after your loving kindness; so shall I keep the testimony of your mouth.

  79. சங்கீதம் 119:89

    கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.

    For ever, O LORD, your word is settled in heaven.

  80. சங்கீதம் 119:90

    உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர். அது நிலைத்திருக்கிறது.

    Your faithfulness is unto all generations: you have established the earth, and it abides.

  81. சங்கீதம் 119:91

    உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும்.

    They continue this day according to yours ordinances: for all are your servants.

  82. சங்கீதம் 119:92

    உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.

    Unless your law had been my delights, I should then have perished in mine affliction.

  83. சங்கீதம் 119:93

    நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.

    I will never forget your precepts: for with them you have quickened me.

  84. சங்கீதம் 119:94

    நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.

    I am yours, save me: for I have sought your precepts.

  85. சங்கீதம் 119:95

    துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.

    The wicked have waited for me to destroy me: but I will consider your testimonies.

  86. சங்கீதம் 119:96

    சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.

    I have seen an end of all perfection: but your commandment is exceeding broad.

  87. சங்கீதம் 119:97

    உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.

    O how I love your law! it is my meditation all the day.

  88. சங்கீதம் 119:98

    நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு, என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.

    You through your commandments have made me wiser than mine enemies: for they are ever with me.

  89. சங்கீதம் 119:99

    உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.

    I have more understanding than all my teachers: for your testimonies are my meditation.

  90. சங்கீதம் 119:100

    உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.

    I understand more than the ancients, because I keep your precepts.

  91. சங்கீதம் 119:101

    உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.

    I have refrained my feet from every evil way, that I might keep your word.

  92. சங்கீதம் 119:102

    நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.

    I have not departed from your judgments: for you have taught me.

  93. சங்கீதம் 119:103

    உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.

    How sweet are your words unto my taste! yea, sweeter than honey to my mouth!

  94. சங்கீதம் 119:104

    உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

    Through your precepts I get understanding: therefore I hate every false way.

  95. சங்கீதம் 119:105

    உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

    Your word is a lamp unto my feet, and a light unto my path.

  96. சங்கீதம் 119:106

    உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.

    I have sworn, and I will perform it, that I will keep your righteous judgments.

  97. சங்கீதம் 119:107

    நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.

    I am afflicted very much: restore life in me, O LORD, according unto your word.

  98. சங்கீதம் 119:108

    கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.

    Accept, I plead to you, the freewill offerings of my mouth, O LORD, and teach me your judgments.

  99. சங்கீதம் 119:109

    என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.

    My soul is continually in my hand: yet do I not forget your law.

  100. சங்கீதம் 119:110

    துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழி தவறேன்.

    The wicked have laid a snare for me: yet I erred not from your precepts.

  101. சங்கீதம் 119:111

    உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.

    Your testimonies have I taken as an heritage for ever: for they are the rejoicing of my heart.

  102. சங்கீதம் 119:112

    முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்.

    I have inclined mine heart to perform your statutes always, even unto the end.

  103. சங்கீதம் 119:114

    என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.

    You are my hiding place and my shield: I hope in your word.

  104. சங்கீதம் 119:115

    பொல்லாதவர்களே, என்னை விட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.

    Depart from me, all of you evildoers: for I will keep the commandments of my God.

  105. சங்கீதம் 119:116

    நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும்.

    Uphold me according unto your word, that I may live: and let me not be ashamed of my hope.

  106. சங்கீதம் 119:117

    என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன்.

    Hold you me up, and I shall be safe: and I will have respect unto your statutes continually.

  107. சங்கீதம் 119:118

    உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துபோடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே.

    You have trodden down all them that go astray from your statutes: for their deceit is falsehood.

  108. சங்கீதம் 119:119

    பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.

    You put away all the wicked of the earth like dross: therefore I love your testimonies.

  109. சங்கீதம் 119:120

    உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.

    My flesh trembles for fear of you; and I am afraid of your judgments.

  110. சங்கீதம் 119:121

    நியாயமும் நீதியும் செய்கிற என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்.

    I have done judgment and justice: leave me not to mine oppressors.

  111. சங்கீதம் 119:122

    உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னை யொடுக்கவொட்டாதேயும்.

    Be guarantor for your servant for good: let not the proud oppress me.

  112. சங்கீதம் 119:123

    உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.

    Mine eyes fail for your salvation, and for the word of your righteousness.

  113. சங்கீதம் 119:124

    உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

    Deal with your servant according unto your mercy, and teach me your statutes.

  114. சங்கீதம் 119:125

    நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.

    I am your servant; give me understanding, that I may know your testimonies.

  115. சங்கீதம் 119:126

    நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.

    It is time for you, LORD, to work: for they have made void your law.

  116. சங்கீதம் 119:127

    ஆதலால் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.

    Therefore I love your commandments above gold; yea, above fine gold.

  117. சங்கீதம் 119:128

    எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

    Therefore I esteem all your precepts concerning all things to be right; and I hate every false way.

  118. சங்கீதம் 119:129

    உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.

    Your testimonies are wonderful: therefore does my soul keep them.

  119. சங்கீதம் 119:131

    உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.

    I opened my mouth, and panted: for I longed for your commandments.

  120. சங்கீதம் 119:132

    உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.

    Look you upon me, and be merciful unto me, as you use to do unto those that love your name.

  121. சங்கீதம் 119:133

    உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.

    Order my steps in your word: and let not any iniquity have dominion over me.

  122. சங்கீதம் 119:134

    மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய, கட்டளைகளைக் காத்துக்கொள்வேன்.

    Deliver me from the oppression of man: so will I keep your precepts.

  123. சங்கீதம் 119:135

    உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

    Make your face to shine upon your servant; and teach me your statutes.

  124. சங்கீதம் 119:136

    உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.

    Rivers of waters run down mine eyes, because they keep not your law.

  125. சங்கீதம் 119:137

    கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.

    Righteous are you, O LORD, and upright are your judgments.

  126. சங்கீதம் 119:138

    நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும் மகா உண்மையுமானவைகள்.

    Your testimonies that you have commanded are righteous and very faithful.

  127. சங்கீதம் 119:139

    என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால் என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.

    My zeal has consumed me, because mine enemies have forgotten your words.

  128. சங்கீதம் 119:140

    உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.

    Your word is very pure: therefore your servant loves it.

  129. சங்கீதம் 119:141

    நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.

    I am small and despised: yet do not I forget your precepts.

  130. சங்கீதம் 119:142

    உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.

    Your righteousness is an everlasting righteousness, and your law is the truth.

  131. சங்கீதம் 119:143

    இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.

    Trouble and anguish have taken hold on me: yet your commandments are my delights.

  132. சங்கீதம் 119:144

    உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.

    The righteousness of your testimonies is everlasting: give me understanding, and I shall live.

  133. சங்கீதம் 119:145

    முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.

    I cried with my whole heart; hear me, O LORD: I will keep your statutes.

  134. சங்கீதம் 119:146

    உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.

    I cried unto you; save me, and I shall keep your testimonies.

  135. சங்கீதம் 119:147

    அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.

    I prevented the dawning of the morning, and cried: I hoped in your word.

  136. சங்கீதம் 119:148

    உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.

    Mine eyes prevent the night watches, that I might meditate in your word.

  137. சங்கீதம் 119:149

    உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்.

    Hear my voice according unto your loving kindness: O LORD, restore life in me according to your judgment.

  138. சங்கீதம் 119:150

    தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள்.

    They draw nigh that follow after mischief: they are far from your law.

  139. சங்கீதம் 119:151

    கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகள் எல்லாம் உண்மை.

    You are near, O LORD; and all your commandments are truth.

  140. சங்கீதம் 119:152

    நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன்.

    Concerning your testimonies, I have known of old that you have founded them for ever.

  141. சங்கீதம் 119:153

    என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.

    Consider mine affliction, and deliver me: for I do not forget your law.

  142. சங்கீதம் 119:154

    எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.

    Plead my cause, and deliver me: restore life in me according to your word.

  143. சங்கீதம் 119:155

    இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.

    Salvation is far from the wicked: for they seek not your statutes.

  144. சங்கீதம் 119:156

    கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.

    Great are your tender mercies, O LORD: restore life in me according to your judgments.

  145. சங்கீதம் 119:157

    என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன்.

    Many are my persecutors and mine enemies; yet do I not decline from your testimonies.

  146. சங்கீதம் 119:158

    உமது வசனத்தைக் காத்துக் கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.

    I beheld the transgressors, and was grieved; because they kept not your word.

  147. சங்கீதம் 119:159

    இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

    Consider how I love your precepts: restore life in me, O LORD, according to your loving kindness.

  148. சங்கீதம் 119:160

    உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.

    Your word is true from the beginning: and every one of your righteous judgments endures for ever.

  149. சங்கீதம் 119:161

    பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள்; ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.

    Princes have persecuted me without a cause: but my heart stands in awe of your word.

  150. சங்கீதம் 119:162

    மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன்.

    I rejoice at your word, as one that finds great spoil.

  151. சங்கீதம் 119:163

    பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.

    I hate and detest lying: but your law do I love.

  152. சங்கீதம் 119:164

    உமது நீதி நியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.

    Seven times a day do I praise you because of your righteous judgments.

  153. சங்கீதம் 119:165

    உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.

    Great peace have they which love your law: and nothing shall offend them.

  154. சங்கீதம் 119:166

    கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.

    LORD, I have hoped for your salvation, and done your commandments.

  155. சங்கீதம் 119:167

    என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.

    My soul has kept your testimonies; and I love them exceedingly.

  156. சங்கீதம் 119:168

    உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.

    I have kept your precepts and your testimonies: for all my ways are before you.

  157. சங்கீதம் 119:169

    கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.

    Let my cry come near before you, O LORD: give me understanding according to your word.

  158. சங்கீதம் 119:170

    என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.

    Let my supplication come before you: deliver me according to your word.

  159. சங்கீதம் 119:171

    உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.

    My lips shall utter praise, when you have taught me your statutes.

  160. சங்கீதம் 119:172

    உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச்சொல்லும்.

    My tongue shall speak of your word: for all your commandments are righteousness.

  161. சங்கீதம் 119:173

    நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.

    Let yours hand help me; for I have chosen your precepts.

  162. சங்கீதம் 119:174

    கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

    I have longed for your salvation, O LORD; and your law is my delight.

  163. சங்கீதம் 119:175

    என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.

    Let my soul live, and it shall praise you; and let your judgments help me.

  164. சங்கீதம் 119:176

    காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்.

    I have gone astray like a lost sheep; seek your servant; for I do not forget your commandments.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.