Skip to content

Popular

Psalms 114 · Tamil Bible

சங்கீதம் 114

சங்கீதம் – அதிகாரம் 114

8 வசனங்கள் · தமிழ் & English

அதிகாரங்கள் · Psalms chapters
  1. சங்கீதம் 114:1

    இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது,

    When Israel went out of Egypt, the house of Jacob from a people of strange language;

  2. சங்கீதம் 114:2

    யூதா அவருக்குப் பரிசுத்தஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு ராஜ்யமுமாயிற்று.

    Judah was his sanctuary, and Israel his dominion.

  3. சங்கீதம் 114:3

    கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

    The sea saw it, and fled: Jordan was driven back.

  4. சங்கீதம் 114:4

    மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும் குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.

    The mountains skipped like rams, and the little hills like lambs.

  5. சங்கீதம் 114:5

    கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்;

    What ailed you, O you sea, that you fled? you Jordan, that you were driven back?

  6. சங்கீதம் 114:6

    மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?

    All of you mountains, that all of you skipped like rams; and all of you little hills, like lambs?

  7. சங்கீதம் 114:7

    பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.

    Tremble, you earth, at the presence of the Lord, at the presence of the God of Jacob;

  8. சங்கீதம் 114:8

    அவர் கன்மலையைத் தண்ணீர்த்தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

    Which turned the rock into a standing water, the flint into a fountain of waters.

இன்றைய வசனம் · Today's Bible Verse ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குத்தத்த வசனம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.