உறவுமில்லை பகையுமில்லை
ஒன்றுமே இல்லை
உள்ளதெல்லாம் நீயே அல்லால்
வேறே கதியில்லை
இனி யாரும் துணை இல்லை......(உறவும்)
எனது வாழ்வின் புனித ஜோதி
எங்கே சென்றாயோ
இதயம் குளிர சேவை செய்யும்
நினைவும் வீணானதே
என் கனவும் பாழானதே......(எனது)
முடிவில்லாத துன்பமதிலும் இன்பம் வேறேது
கெடுதி செய்வார் தனிலும் மேலாம் நண்பர் வேறேது
அடைய முடியா பொருளின் மீது
ஆசை தீராது உறவு அபிமானம் மாறாது (உறவும்)
குளம் நிறைந்தால் ஜலம் வழிந்தே வேறே வழியேகும்
குமுறி புகையும் எரிமலையும் ஓர் நாள் அமைதியாகும்
மனதில் பொங்கும் துயர வெள்ளம்
வடியும் நாளேது ஒரு முடிவு தானேது
எனது வாழ்வின் புனித ஜோதி
எங்கே சென்றாயோ
உள்ளதெல்லாம் நீயே அல்லால்
வேறே கதியில்லை
இனி யாரும் துணை இல்லை......(உறவும்)