வைரலாகும் பரம சுந்தரியின் போஸ்

மிமி படத்தில் பரம சுந்தரி பாடலுக்கு நடனமாடி அசத்திய க்ரித்தி சனோன் பிரைடல் லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

1.

மிமி படத்தில் பரம சுந்தரி பாடலுக்கு நடனமாடி அசத்திய க்ரித்தி சனோன் பிரைடல் லுக்கில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்து வரும் பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ராணி போல இருக்கீங்க க்ரித்தி என ஏகப்பட்ட பாலிவுட் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ஆதி புருஷ் படத்தோட கெட்டப்பா என்றும் சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சைடு போஸ் கொடுத்து தனக்கு இது தான் சரியா இருக்கு என அவரே கேப்ஷனும் போட்டு வைரலாக்கி உள்ளார்.

மிமி படத்தில் இவர் நடனமாடிய பரம சுந்தரி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

சமீபத்தில் அட்டை படம் ஒன்றுக்கு படு ராயலாக போஸ் கொடுத்த க்ரித்தி சனோனின் போட்டோக்களும் டிரெண்டாகி வருகின்றன.

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொருத்தராக இவரது வயிற்றுக்கு பக்கத்தில் காது வைத்து குழந்தை சத்தம் கேட்கிறதா என குசும்பாக எடுத்த புகைப்படங்களும் செம வைரல்.

மிமி படத்தில் வாடகைத் தாயாக நடித்து பலரது பாராட்டுக்களை அள்ளி இருந்தார் க்ரித்தி சனோன்.