அன்பே பாவமா அதில் ஏதும் பேதமா
ஆவல் கொண்ட பேதை எந்தன்
காதல் பாவமா என் அன்பே பாவமா
பண்பே இல்லாத ஈன ஜன்மம் பாரினில் நானே
பணி ஏவும் சேவை செய்தும்
பயன் ஒன்றும் காணேனே
பல நாள் வீணில் இலவே காத்த
கிளி போல் ஆனேனே....(அன்பே)
என் மனதை நன்றாய் அறிந்த பின்னும்
என்னை இழிவாகவே மதித்தார்
ஏவல் செய்யும் அடிமையாய்
அவருடன் இருக்கவும் விடை மறுத்தார்
நிறைவேறிடாத காதல்
நினைவே நீங்கவுமில்லை
உயர் நேசம் கொண்ட என்மேல்
மன சந்தோஷமில்லை
நேர்மையற்ற வாழ்வில் கண்ட லாபமேதுமில்லை
இருள் மூடி கிடந்த என் வாழ்விலே
கலங்கரை விளக்கமானார்
மருள் சேரும் மதுவினின்றும் அவரை மீட்கும்
திறனற்ற பாவியானேன்
குடியாலே மோகனாங்க வடிவம் குன்றிடலானார்
கொடு நோயின் வாதையாலே உடல் நலமும் இழந்தார்
குணமும் கொண்ட பொருளும்
கல்வி அறிவும் துறந்தார் என் (அன்பே)