வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.

வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

 0  562
வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்.

வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். வாழைப் பூவை நறுக்கி சாறு எடுத்து அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மேற்கண்ட பிணிகள் எல்லாம் உடனே குணமாகும். வாழைப்பூ பித்தம், வாதம் உடலில் ரத்தக் குறைவு, கிராணி, வயிற்றில் பூச்சி முதலிய வியாதிகளுக்கு சஞ்சீவி போன்றது.

வாழைப்பூ சாற்றில் தயிரைக் கலந்து உட்கொண்டால் ரத்தக் கிராணி, பெரும்பாடு முதலியவை நீங்கும். நால தோலா சாற்றில் இரண்டு தோலா தயிரைக் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை உட்கொண்டால் நல்ல குணம் தெரியும்.

வாழைப்பூவை இடித்து சிற்றாமணக்கு எண்ணெய்யை விட்டு வதக்கி, கைகால் எரிச்சல் உள்ள இடத்தில் ஒற்றடமிட்டால் எரிச்சல் போகும். வாழைப்பூவை வாரத்திற்கொரு முறையேனும் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.

பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும். வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.

மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். வாழைப்பூவில் உப்பு போட்டு வேக வைத்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow