உங்கள் வீட்டில் இந்த 3 பொருட்கள் குறையாமல் இருத்தல் உங்கள் வீட்டிலும் செல்வம் குறையாது.

Nov 11, 2021 - 12:26
 0  556
உங்கள் வீட்டில்  இந்த 3 பொருட்கள் குறையாமல் இருத்தல்   உங்கள் வீட்டிலும் செல்வம் குறையாது.

ஒரு குடும்பம் வறுமை நிலையில் வாடிக்கொண்டிருப்பதற்கு காரணம் பணம் பற்றாக்குறை, குடும்ப உறவினர்கள் இடையே சண்டை, வியாபாரத்தில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் பாதிப்பு இவ்வாறு எந்தவித பிரச்சனையாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒருவரின் மனம் நிம்மதி இல்லாமல் இருந்தது என்றால் அந்த வீட்டின் வறுமை நிலை அதிகரித்துக்கொண்டு தான் செல்லும். தவிர அவற்றை குறைப்பதற்கு வழி ஒன்றும் கிடைக்காது. எனவே எப்போதும் மனது சஞ்சலத்துடனும் குழப்பத்துடனும் இருந்தது என்றால் நமது முன்னேற்றத்தை அதை குறைத்து விடும். எனவே முதலில் நமது மனதை தெளிவுபடுத்த வேண்டும். அதன் பிறகே நமது வறுமை நிலையை மாற்ற முடியும். இதற்காக நமது வீட்டிலிருக்கும் 3 பொருட்களை எப்பொழுதும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவை என்னென்ன? அவற்றின் பலன்கள் என்ன? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு வீட்டில் இருக்கும் கணவன், மனைவி, பெற்றோர்கள், குழந்தைகள் இவர்கள் அனைவரும் மிகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இவர்களில் எவரேனும் ஒருவரால் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் அந்த சிறு பிரச்சினை அடுத்தடுத்து வரும் பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாகிவிடும். அவ்வாறு வீட்டில் உள்ளவர்கள் நிம்மதியைக் குலைத்து அவர்கள் எதையும் சிந்திக்க முடியாமல் மன அழுத்தத்தில் இருக்கும் போது, அவர்களால் எந்தவித தெளிவான முடிவையும் எடுக்க முடியாது. தொழிலிலும் கவனம் செலுத்த முடியாது. இந்த நிலைமை தொடர்ந்தது என்றால் அந்த குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்படும்.

எனவே வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமான மூன்று பொருட்கள் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். இவை மனதில் இருக்கும் குழப்பத்தை தெளிவுபடுத்தி மனநிம்மதியை கொடுக்கவல்லது. அவ்வாறு முதலில் நமது வீட்டில் இருக்க வேண்டிய ஒரு பொருள் கோமாதாவின் திரு உருவமான பசுவிடமிருந்து கிடைக்ககூடிய நெய் தான்.

இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கும் நெய்யினை சாதத்தில் சேர்த்துப் பிசைந்து கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் வீட்டில் நெய்தீபம் ஏற்றி இறைவனை தவறாமல் வணங்கி வந்தாலும் மன நிம்மதி கிடைக்கும்.

இரண்டாவதாக மகாலட்சுமி வாசம் செய்யும் ஊறுகாய் எப்பொழுதும் வீட்டில் நிறைந்திருக்க வேண்டும். அதிலும் குபேரனுக்கு மிகவும் பிடித்த நெல்லிக்காய் ஊறுகாய் இருப்பது மிகவும் விசேஷமாகும். நெல்லிக்காயை ஊறுகாயாக மட்டுமல்லாமல் நெல்லிக்காய் தீபம் ஏற்றியும் இறைவனை தொழுவதென்பது நமது வீட்டின் வறுமை நிலையை அகற்றுகிறது.

மூன்றாவதாக நமது வீட்டில் இருக்க வேண்டிய ஒரு பொருள், பூஜை அறையை அடுத்து ஒரு வீட்டின் முக்கிய இடமாக பார்க்கப்படுவது சமையலறை தான். அந்த சமயலறையில் நமது வீட்டின் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் அஞ்சரை பெட்டியில் இருக்க வேண்டிய ஒரு பொருள் தான் அது. சமையலின் வாசத்தை கூட்டுவதற்காக நாம் பயன்படுத்தும் பிரிஞ்சி இலை தான் அது. இது நமது வீட்டின் வறுமை நிலையை அகற்றக் கூடிய ஒரு முக்கிய பொருளாகும். இதனை எப்பொழுதும் நமது வீட்டின் சமையலறையில் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது எந்த அளவிற்கு வீட்டில் இருக்கிறதோ அந்த அளவிற்கு நமது வீட்டில் தனம், தான்யம் நிறைந்து காணப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow