சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி?

 0  142
சுண்டைக்காய் குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்  செய்முறை

சுண்டைக்காய் - ஒரு ஆழாக்கு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
உரித்த பூண்டு - ஒரு கைப்பிடி அளவு
குழம்பு மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - 2 தேக்கரன்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 20
தக்காளி - 2
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
நல்லெண்ணெய் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
வெல்லம் - ஒரு சுண்டைக்காய் அளவு
வறுத்து பொடித்த வெந்தயப் பொடி - அரை தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி

செய்முறை

1. சுண்டைக்காயைத் தட்டி, அதிலுள்ள விதை போக தண்ணீரில் அலசிக் கொள்ளவும். வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும். தக்காளியை சிறு   துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2 டம்ளர் தண்ணீரில் புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

2. வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, சீரகம் மற்றும் கொத்தமல்லியை சிவக்க வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.

3. வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு பாதி வெங்காயம், சிறிது கறிவேப்பிலை மற்றும் தேங்காயைச் சேர்த்து நன்கு வதக்கி ஆற வைக்கவும்.

4. முதலில் வறுத்து ஆற வைத்தவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

5. அதனுடன் வதக்கி ஆற வைத்தவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.

6. வாணலியில் மீதமுள்ள எண்ணெயை விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பூண்டைச் சேர்த்து வதக்கவும்.

7. பூண்டு நன்கு வதங்கியதும் மீதமுள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும்.

8. வெங்காயம் வதங்கியதும் சுண்டைக்காய் மற்றும் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து  பிரட்டவும்.

9. பிறகு புளிக்கரைசல், அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து நன்கு கெட்டியானதும் வெந்தயப்   பொடி மற்றும் வெல்லம் சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும்.சுவையான சுண்டைக்காய் குழம்பு தயார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow