Tamil Songs lyrics · 2000
Nirpathuve Nadapathuve lyrics from Bharathi movie - பாரதி திரைப்படத்திலிருந்து நிற்பதுவே நடப்பதுவே பாடல் வரிகள்
நிற்பதுவே நடப்பதுவே பாடல் 2000-ல் வெளியான பாரதி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: ஹரிஷ் ராகவேந்திரா
Nirpathuve Nadapathuve is a song from the 2000 Tamil film Bharathi, composed by Ilaiyaraaja and sung by Harish Raghavendra.
- Movie Name
- Bharathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பாரதி
- Music
- Ilaiyaraaja
- Year
- 2000
- Singers
- Harish Raghavendra
Lyrics(Tamil)
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
வானகமே இளவெயிலே மரச்செறிவே
வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ
வானகமே இளவெயிலே மரச்செறிவே
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அற்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
Nirpathuve Nadapathuve song FAQ
Who sang Nirpathuve Nadapathuve?
Nirpathuve Nadapathuve was sung by Harish Raghavendra for the 2000 Tamil film Bharathi.
Who composed the music for Nirpathuve Nadapathuve?
The music for Nirpathuve Nadapathuve was composed by Ilaiyaraaja.
Which movie is the song Nirpathuve Nadapathuve from?
Nirpathuve Nadapathuve is from the Tamil film Bharathi, released in 2000. The film has 10 songs on Tamilputhumai.
நிற்பதுவே நடப்பதுவே பாடலை பாடியவர் யார்?
நிற்பதுவே நடப்பதுவே பாடலை பாடியவர் ஹரிஷ் ராகவேந்திரா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் & வாழ்த்து · Love & wishes
பாரதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Ethilum Ingu
எதிலும் இங்கு இருப்பான்
Mayil Pola Ponnu onnu
மயில் போல பொண்ணு
Agini Kunjondru
அக்னி குஞ்சொன்று
Keladaa Manida
கேளடா மானிடாவா
Ninnaichcharan Adainthen
நின்னைச் சரணடைந்தேன்
Vante Matharam
வந்தே மாதரம் ஜய
Nallathor Veenai
நல்லதோர் வீணைசெய்தே
Baratha Samuthayam
பாரத சமுதாயம் வாழ்கவே
Ninnaicharan Adainthen Female