Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Baratha Samuthayam lyrics from Bharathi movie - பாரதி திரைப்படத்திலிருந்து பாரத சமுதாயம் வாழ்கவே பாடல் வரிகள்

பாரத சமுதாயம் வாழ்கவே பாடல் 2000-ல் வெளியான பாரதி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: இளையராஜா · பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்

Baratha Samuthayam is a song from the 2000 Tamil film Bharathi, composed by Ilaiyaraaja and sung by K. J. Yesudas.

WhatsApp
Movie Name (in Tamil)
பாரதி
Year
2000

Lyrics(Tamil)

பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை ;
ஒப்பி லாத சமுதாயம்
உலகத்துக் கொருபுதுமை - வாழ்க !
(பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ...)

சரணங்கள்
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை யினியுண்டோ ? (புலனில்
வாழ்க்கை யினியுண்டோ ? - நாமிழந்த
வாழ்க்கை யினியுண்டோ ?)

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு -
கனியுங் கிழங்குந் தான்யங்களும்
கணக்கின்றித்தரு நாடு - (இது
கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்
கணக்கின்றி தரு நாடு )

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ ? ....
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளுங் காப்போம்
தனி யொருவனுக் குணவில்லை எனில்
ஜகத்தினை அழித் திடுவோம் (வாழ்க ! பாரத சமுதாயம் வாழ்கவே !)
(ஜய ஜய ...)

"எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்"
என்றுரைத்தான் கண்ண பெருமான்
எல்லோரும் அமரநிலை யெய்துநன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - (ஆம்,
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம், ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்) - இங்கு
(மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்க மினியுண்டோ ?)

எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்தியா மக்கள்
எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ! - (நாம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ! - ஆம் !
எல்லோரும் இந்நாட்டு மன்னர் !) - வாழ்க -
பாரத சமுதாயம் வாழ்கவே
(ஜய ... ஜய)

Baratha Samuthayam song FAQ

Who sang Baratha Samuthayam?

Baratha Samuthayam was sung by K. J. Yesudas for the 2000 Tamil film Bharathi.

Who composed the music for Baratha Samuthayam?

The music for Baratha Samuthayam was composed by Ilaiyaraaja.

Which movie is the song Baratha Samuthayam from?

Baratha Samuthayam is from the Tamil film Bharathi, released in 2000. The film has 10 songs on Tamilputhumai.

பாரத சமுதாயம் வாழ்கவே பாடலை பாடியவர் யார்?

பாரத சமுதாயம் வாழ்கவே பாடலை பாடியவர் கே. ஜே. யேசுதாஸ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பாரதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்