Skip to content

Popular

Tamil Songs lyrics · 2003

Nenjodu lyrics from Kaadhal Kondein movie - காதல் கொண்டேன் திரைப்படத்திலிருந்து நெஞ்சோடு கலந்திடு பாடல் வரிகள்

நெஞ்சோடு கலந்திடு பாடல் 2003-ல் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: உன்னிகிருஷ்ணன்

Nenjodu is a song from the 2003 Tamil film Kaadhal Kondein, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Unni Krishnan.

WhatsApp
Year
2003

Lyrics(Tamil)

நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே
ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மலர்வாயே?
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முகமூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா

நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தால்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை

ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்
சிறு பூவாக நான் மலர்வேனே
ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

Nenjodu song FAQ

Who sang Nenjodu?

Nenjodu was sung by Unni Krishnan for the 2003 Tamil film Kaadhal Kondein.

Who wrote the lyrics of Nenjodu?

The lyrics of Nenjodu were written by Na. Muthukumar.

Who composed the music for Nenjodu?

The music for Nenjodu was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Nenjodu from?

Nenjodu is from the Tamil film Kaadhal Kondein, released in 2003. The film has 10 songs on Tamilputhumai.

நெஞ்சோடு கலந்திடு பாடலை பாடியவர் யார்?

நெஞ்சோடு கலந்திடு பாடலை பாடியவர் உன்னிகிருஷ்ணன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதல் கொண்டேன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்