Skip to content

Popular

Tamil Songs lyrics · 2003

Manasu Rendum lyrics from Kaadhal Kondein movie - காதல் கொண்டேன் திரைப்படத்திலிருந்து மனசு ரெண்டும் பார்க்க பாடல் வரிகள்

மனசு ரெண்டும் பார்க்க பாடல் 2003-ல் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: சங்கர் மகாதேவன்

Manasu Rendum is a song from the 2003 Tamil film Kaadhal Kondein, written by Palani Barathi, composed by Yuvan Shankar Raja and sung by Shankar Mahadevan.

WhatsApp
Year
2003

Lyrics(Tamil)

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
நரம்பில் ஒரு நதி பாயுதே
இது என்ன வேட்கை
காதல் வலி உடல் காயுதே
இது என்ன வாழ்க்கை
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

காதல் சருகான பின்பு
மோகம் வந்தாலே சாபம்
கண்ணில் முள் வைத்து மூடி
தூங்க சொன்னாலே பாவம்
உன் மார்பில் வழிகின்ற நீர் அள்ளி
மருந்து போல குடிப்பேன்
என் பித்தம் கொஞ்சம் தணிப்பேன்
உன் பாத சுவடுக்குள்
சுருண்டு விழுந்து மரிப்பேன்
உடல் சீறுதே நிறம் மாறுதே
வலி ஏறுதே இது என்ன கலவரமோ

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா
அலையின் வேதனை நிலவு அறியுமா
வேதனைகள் நெஞ்சில் சுகமா எங்கும் பரவுதடி
உடலே உடலே உறைந்து போய்விடு
மனமே மனமே இறந்து போய்விடு
பாதையிலே சிறு கல்லாய் என்னை கிடக்க விடு
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே
கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே
அதை மறைக்காதே…
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே

Manasu Rendum song FAQ

Who sang Manasu Rendum?

Manasu Rendum was sung by Shankar Mahadevan for the 2003 Tamil film Kaadhal Kondein.

Who wrote the lyrics of Manasu Rendum?

The lyrics of Manasu Rendum were written by Palani Barathi.

Who composed the music for Manasu Rendum?

The music for Manasu Rendum was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Manasu Rendum from?

Manasu Rendum is from the Tamil film Kaadhal Kondein, released in 2003. The film has 10 songs on Tamilputhumai.

மனசு ரெண்டும் பார்க்க பாடலை பாடியவர் யார்?

மனசு ரெண்டும் பார்க்க பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காதல் கொண்டேன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்