Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Deewana lyrics from Gemini movie - ஜெமினி திரைப்படத்திலிருந்து தீவானா தீவானா பாடல் வரிகள்

தீவானா தீவானா பாடல் 2002-ல் வெளியான ஜெமினி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: பரத்வாஜ் · பாடியவர்: சாதனா சர்கம்

Deewana is a song from the 2002 Tamil film Gemini, written by Vairamuthu, composed by Bharathwaj and sung by Sadhana Sargam.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜெமினி
Year
2002
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீ தானா
தீவானா ஹோ தீவானா நெஞ்சி பிழிந்தவன் நீ தானா

என் வீட்டு கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து
தன்காதல் சொல்லும் மாயக்கண்ணனா

தீவானா ஹோ தீவானா நெஞ்சி பிழிந்தவன் நீ தானா

வெள்ளிக்கிழமையில் வீட்டு தோட்டத்தில்
வால் முளைத்த சிட்டு ஒன்று வந்து விட்டதே

கீச்ச் கீச்சென்று கூச்சல் போடுதே
நெஞ்சுக்கூட்டில் கூடு கட்ட மல்லுக்கட்டுதே

சும்மா அது கத்திச் செல்லுமோ
இல்லை எம்மா நெஞ்சை கொத்திச் செல்லுமோ

அன்னை தந்தையை ஆசை தோழியை
காணும்போது நாணம் வன்து கண்கள் கூசுதே

தூக்கம் விற்று தான் காதல் வாங்கினாய்
என்று எந்தன் பெண்மை என்னை கேலி பேசுதே

அய்யோ இன்னும் என்னவாகுமோ
எந்தன் ஆடை நாளை கொள்ளை போகுமோ

மிலே ஏக் அஜ்னபிசே கோயி ஆகெ ந பீச்சே
தும் யகி ககோ க்யா பாத் ஹை

தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா
காதல் எண்ணமே அய்யோ அசிங்கமே

என்று கண்கள் காது மூக்கு பொத்திக் கொண்டவள்
காதல் காலடி ஓசை கேட்டதும்

வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டன
காதல் உள்ளே வந்து விட்டது
எந்தன் நாணம் வெளியே சென்று விட்டது

தோழி ஒருத்தியை நேரில் நிறுத்தி நான்
காதில் ஒற்றை சேதி சொல்ல நெஞ்சம் முட்டுதே

ஆனா நாவிலே ஆனா ஆவன்னா
ரெண்டெழுத்தை தவிற வேற வார்த்தை இல்லையே

ஆசை வந்து தத்தளிக்கிறேன்
என் பாஷை மாற்றி உச்சரிக்கிறேன்

மிலே ஏக் அஜ்னபிசே கோயி ஆகெ ந பீச்சே
தும் யகி ககோ க்யா பாத் ஹை

தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா
தீவானா நெஞ்சி பிழிந்தவன் நீ தானா

என் வீட்டு கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து
தன்காதல் சொல்லும் மாயக் கண்ணனா

தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா

Deewana song FAQ

Who sang Deewana?

Deewana was sung by Sadhana Sargam for the 2002 Tamil film Gemini.

Who wrote the lyrics of Deewana?

The lyrics of Deewana were written by Vairamuthu.

Who composed the music for Deewana?

The music for Deewana was composed by Bharathwaj.

Which movie is the song Deewana from?

Deewana is from the Tamil film Gemini, released in 2002. The film has 7 songs on Tamilputhumai.

தீவானா தீவானா பாடலை பாடியவர் யார்?

தீவானா தீவானா பாடலை பாடியவர் சாதனா சர்கம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜெமினி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்