தமிழ் தினசரி காலண்டர் 14-11-2026

இன்றைய பஞ்சாங்கம் (14.11.2026)

  • தமிழ் தேதி: பராபவ வருடம், ஐப்பசி 28, சனிக் கிழமை
  • திதி: பஞ்சமி 23.24 வரை, பின்பு சஷ்டி
  • நட்சத்திரம்: பூராடம் 20.24 வரை, பின்பு உத்திராடம்
  • யோகம்: சூலம் நாளை 06.22 வரை, பின்பு கண்டம் (சித்த யோகம்)
  • கரணம்: பவம் 10.03 வரை, பின்பு பாலவம்
  • நல்ல நேரம்: காலை 7.45 - 8.45 / மாலை 4.45 - 5.45
  • கௌரி நல்ல நேரம்: காலை 10.45 - 11.45 / மாலை 9.30 - 10.30
  • இராகு காலம்: 9.00 - 10.30
  • எமகண்டம்: 1.30 - 3.00
  • குளிகை: 6.00 - 7.30
  • சூலம்: கிழக்கு (பரிகாரம்: தயிர்)
  • சந்திராஷ்டமம்: மிருகசீரிடம், திருவாதிரை
  • லக்னம்: துலாம் லக்னம் இருப்பு நா. 0 வி. 27
  • சூரிய உதயம் / அஸ்தமனம்: 6.10 AM / 5.35 PM

சென்னை பஞ்சாங்கம் முழு விவரம் ›

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரியவர்களின் உடல்நலனில் அக்கறை காட்டவும். பண விவகாரங்களில் கவனம் செலுத்தவும். உத்யோகத்தில் அமைதி நிலவும். கூட்டாளிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, எதிர்பாராத தடைகள் வரலாம்; பொறுமை அவசியம். குடும்பத்தில் எதிர்பாராத சம்பவங்கள் நடக்கலாம். சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்கும் முன் யோசிக்கவும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க தாமதமாகும். சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பிள்ளைகளால் பெருமை சேரும். பணவரவு நன்றாக இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். வியாபார விரிவாக்க முயற்சிகள் கைகூடும். இன்று 03:12 AM முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய முடிவுகளை தள்ளி வைக்கவும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும்; கடன் சுமை குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, பிள்ளைகளின் விஷயத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. வரவுக்கேற்ப செலவுகளும் உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை; வாகனத்தில் மெதுவாக செல்லவும். கணவன் மனைவிக்குள் பனிப்போர் உருவாகலாம்; அமைதி காக்கவும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். அலுவலக ரகசியங்களை பகிர வேண்டாம். வியாபாரத்தில் கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, புத்தி கூர்மையால் எதையும் சாதிப்பீர். உறவினர்கள் வழியில் நற்செய்தி கிடைக்கும். சேமிப்பு உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, பேச்சில் நிதானம் தேவை; வீண் விவாதங்களை தவிர்க்கவும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்ற அலைய வேண்டிவரும். சுபச் செலவுகள் ஏற்படும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் லாபத்தை தரும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, மனதில் மகிழ்ச்சி பொங்கும்; நல்ல உணவும் ஓய்வும் கிடைக்கும். குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். எதிர்பாராத தனவரவு உண்டு. வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, தூக்கமின்மை வரலாம்; வீண் செலவுகளை குறைக்கவும். உறவினர்களுடன் வாக்குவாதம் தவிர்க்கவும். தேவையின்றி கடன் வாங்காதீர்கள். உத்யோகத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்; எண்ணங்கள் ஈடேறும். பெற்றோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில் வியாபாரம் சிறப்படையும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே, செய்யும் வேலையில் வெற்றியும் பாராட்டும் கிடைக்கும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் சாதகமாக முடியும். பணத்தட்டுப்பாடு குறையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

இன்றைய ராசிபலன் முழு விவரம் ›