தமிழ் தினசரி காலண்டர் 11-11-2026

இன்றைய பஞ்சாங்கம் (11.11.2026)

  • தமிழ் தேதி: பராபவ வருடம், ஐப்பசி 25, புதன் கிழமை
  • திதி: துவிதியை 15.53 வரை, பின்பு திருதியை
  • நட்சத்திரம்: அனுஷம் 11.38 வரை, பின்பு கேட்டை
  • யோகம்: அதிகண்டம் நாளை 03.40 வரை, பின்பு சுகர்மம் (சித்த யோகம்)
  • கரணம்: கௌலவம் 15.53 வரை, பின்பு தைதிலம்
  • நல்ல நேரம்: காலை 9.15 - 10.15 / மாலை 4.45 - 5.45
  • கௌரி நல்ல நேரம்: காலை 10.45 - 11.45 / மாலை 6.30 - 7.30
  • இராகு காலம்: 12.00 - 1.30
  • எமகண்டம்: 7.30 - 9.00
  • குளிகை: 10.30 - 12.00
  • சூலம்: வடக்கு (பரிகாரம்: பால்)
  • சந்திராஷ்டமம்: பரணி
  • லக்னம்: துலாம் லக்னம் இருப்பு நா. 0 வி. 59
  • சூரிய உதயம் / அஸ்தமனம்: 6.09 AM / 5.36 PM

சென்னை பஞ்சாங்கம் முழு விவரம் ›

இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, சவால்களை, விவாதங்களை சந்திக்க வேண்டிவரும். குடும்பத்தில் யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். தேவையின்றி கடன் வாங்காதீர்கள். மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் தவிர்க்கவும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க தாமதமாகும். சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்; நண்பர்களால் நன்மை உண்டு. கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத தனவரவு உண்டு. பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் தேடி வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். கொடுத்த கடன் திரும்ப வரும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது; மனக்குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகையால் செலவுகள் கூடும். பண விவகாரங்களில் கவனம் செலுத்தவும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, மனதில் இனம் புரியாத கவலை வந்து போகும். உறவினர்களால் மறைமுக பிரச்சனைகள் வரலாம். சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டு; சிறு பயணங்கள் நன்மை தரும். பெற்றோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில் வியாபாரம் சிறப்படையும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, வாக்கு சாமர்த்தியம் அதிகரிக்கும்; ஆனால் செலவுகளும் கூடும். வேண்டியவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். வரவுக்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரம் லாபத்தை தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, மனம் தெளிவாக இருக்கும்; முகத்தில் பொலிவு கூடும். வீட்டில் சுபகாரியப் பேச்சுகள் சாதகமாக முடியும். பண தேவைகள் பூர்த்தியாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும்; செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் பனிப்போர் உருவாகலாம்; அமைதி காக்கவும். திடீர் மருத்துவ செலவு வரலாம். பணியிடத்தில் பிறர் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்க நேரலாம். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, மூத்த சகோதரர்கள் வழியில் ஆதாயம் உண்டு; லாபம் பெருகும். உறவினர்கள் வழியில் நற்செய்தி கிடைக்கும். நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். சேமிப்பு உயரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே, ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ள முடியும்; தந்தையின் ஆலோசனை கைகொடுக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்ற அலைய வேண்டிவரும். கடன் பிரச்சனை அவ்வப்போது வந்து போகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். கூட்டாளிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கவும்.

இன்றைய ராசிபலன் முழு விவரம் ›