இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(01-04-2020)
இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(01-04-2020)

#இன்றையபஞ்சாங்கம்
1-ஏப்ரல்-2020
சூரியோதயம் : 6:19 am சந்திரௌதயம் : 12:00 PM
சூரியாஸ்தமனம் : 6:27 pm சந்திராஸ்தமனம் : 01:15 AM
சூரியன்ராசி : மீனம்
சந்திரன்ராசி : மிதுனம்
மாதம் : பங்குனி 19"ம் நாள்
பக்ஷம் : சுக்ல பக்ஷம்
#பஞ்சாங்கம்
1️⃣,வாரம் : அறிவன்(புதன்)
2️⃣,திதி : அஷ்டமி இறுதி 03:40 am
3️⃣,நட்சத்திரம் : திருவாதிரை இறுதி 07:29 pm புனர்பூசம்
4️⃣,யோகம் : சோபனம் இறுதி 04:56 pm அதிகண்டம்
5️⃣,கரணம் :பத்திரை 03:51 pm
பவம் 03:40 am
#நல்ல_நேரம்
அபிஜித் : 11:59 am – 12:47 pm
அமிர்த காலம் : 09:10 am – 10:49 am
ஆனந்ததி யோகம் : 07:29 pm Gada
☻#கெட்ட_நேரம்☻
ராகுகாலம் : 12:26 PM – 1:42 PM
யம கண்டம் : 8:35 AM – 9:52 AM
தியாஜ்யம் : None
குளிகன் : 11:09 AM – 12:26 PM
#துர்முஹுர்த்தம்
1. 12:05 PM – 12:46 PM
#நாள்_முழுவதும் #சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
#சுப_ஹோரைகள்
காலை 06.00-07.00,
காலை 09.00-10.00,
மதியம் 1.30-2.00,
மாலை 04.00-05.00,
இரவு 07.00-09.00, 11.00-12.00
#சந்திராஷ்டமம்
#கேட்டை
#மூலம்
மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் நிலை சீராகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க நேரிடும்.
மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவி கிட்டும்.
கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் எந்த விஷயத்திலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது சிறப்பு. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.
சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.
துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பொருளாதார நிலை ஓரளவு சீராகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.
விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய வியாபாரம் தொடங்குவதில் ஒரு சிலருக்கு ஆர்வம் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு கொள்வதற்கு வாய்ப்பு அமையும்.
மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு குறையும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை தரும்.
What's Your Reaction?






