இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(24-10-2021)
இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(24-10-2021)

இன்றைய பஞ்சாங்கம்
Date : ஞாயிறு, 24 அக்டோபர் 2021
சூரிய உதயம் : 06:04
சூரிய அஸ்தமனம் : 17:42
சந்திர உதயாதி நாழிகை: 20:28
சந்திர அஸ்தமனம் : 08:51
ஷகா சம்வத் : 1943 பிலவ
Lunar Month : ஐப்பசி 7
பட்சம் : கிருஷ்ண பக்ஷம்
திதி : சதுர்த்தி - 29:43 வரை
நட்சத்திரத்தன்று : ரோகிணி - 25:02 வரை
யோகம் : வரியான் - 23:35 வரை
முதல் கர்ணன் : பவம் - 16:21 வரை
இரண்டாவது கர்ணன் : பாலவம் - 29:43 வரை
சூரிய அடையாளம் : துலாம்
சந்திரன் அடையாளம் : ரிஷபம்
அபிஜித் : 11:30 - 12:16
துர்முஹுர்த்தம் : 16:09 - 16:55
அமிர்தகாலம் : 21:25 - 23:13
Varjyam : 15:59 - 17:48
ராகுகாலம் : 16:15 - 17:42
குளிகை : 14:47 - 16:15
யமகண்டம் : 11:53 - 13:20
#சந்திராஷ்டமம்
சுவாதி+விசாகம்
ராசிபலன்கள்
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் புதிய பொறுப்புகள் சுமக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்பட லாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடையும்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நேர்மறையான சிந்தனையுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அத்தனையையும் தன்னம்பிக்கையுடன் எதிர்த்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய முகத்தில் பொலிவு காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் நிலவும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி காண யோகம் உண்டு. ஆடம்பர பொருள் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி அன்பு பெருகும்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான பொருளாதார முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்பு சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. வழக்கு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடைபெறக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிலும் அலட்சியம் இருக்கும் எனவே கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் மற்றும் டென்ஷன் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியோர்களிடைய இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வரிகளுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபடாமல் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்யம் சீராகும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் பொறுமை தேவை. துடுக்கு தரமாக எதையாவது செய்துவிட்டு எதிலாவது மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய புதிய முயற்சிகள் மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெற்று தரும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பதை விட அதிக லாபத்தை காணக் கூடிய யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடைய மனநிலையில் தடுமாற்றம் ஏற்படலாம். தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்த்து விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளில் கால தாமதம் ஏற்படலாம்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த சுப காரிய தடைகள் விலகி நன்மைகள் நடைபெறும். மனதிற்கு பிடித்தவரை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத பணத்தொகை கைக்கு கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் மனதிற்குப் பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வாடிக்கையாளர்களை கவரும் இப்படி கையாளுவது சிறப்பு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய கவனச்சிதறல் மற்றவர்களை பாதிப்படைய செய்யும் எனவே எச்சரிக்கை தேவை.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொடங்க இருக்கும் புதிய முயற்சிகளுக்கு பெற்றோர்களுடைய ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் விரியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்ப்பது நல்லது. தீர்க்கமான முடிவை எடுத்த பின்பு செயலாக்கம் செய்வது நன்மைகளைக் கொடுக்கும்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உடன்பிறந்தவர்கள் உடைய ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டாகும். வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும். சுய தொழிலில் லாபம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கூடுதல் அக்கறை தேவை. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
What's Your Reaction?






