இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(25-03-2020)
இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(25-03-2020)
#இன்றையபஞ்சாங்கம்
25-மார்ச்-2020
சூரியோதயம் : 6:23 am சந்திரௌதயம் : 06:59 am
சூரியாஸ்தமனம் : 6:27 pm சந்திராஸ்தமனம் : 07:22 pm
சூரியன்ராசி : மீனம்
சந்திரன்ராசி : மீனம்
மாதம் : பங்குனி 12"ம் நாள்
பக்ஷம் : சுக்ல பக்ஷம்
#பஞ்சாங்கம்
1️⃣,வாரம் : அறிவன்(புதன்)
2️⃣,திதி : பிரதமை இறுதி 05:27 pm துவிதியை
3️⃣,நட்சத்திரம் : ரேவதி இறுதி 07:16 am
4️⃣,யோகம் : பிராமியம் இறுதி 03:37 pm ஐந்திரம்
5️⃣,கரணம் :பவம் 05:27 pm
பாலவம் 06:41 am
#நல்ல_நேரம்
அபிஜித் : 12:01 pm – 12:49 pm
அமிர்த காலம் : 10:55 pm – 12:43 am
ஆனந்ததி யோகம் : Utpata
☻#கெட்ட_நேரம்☻
ராகுகாலம் : 12:26 pm – 1:42 pm
யம கண்டம் : 8:35 am – 9:52 am
தியாஜ்யம் : 17:48 pm – 19:36 pm
குளிகன் : 11:09 am – 12:26 pm
#துர்முஹுர்த்தம்
1. 12:05 pm – 12:46 pm
#நாள்_முழுவதும் #மரணயோகம்.
நேத்திரம் – 0. ஜீவன் – 0. தெலுங்கு வருட பிறப்பு. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
#சுப_ஹோரைகள்
காலை 06.00-07.00,
காலை 09.00-10.00,
மதியம் 1.30-2.00,
மாலை 04.00-05.00,
இரவு 07.00-09.00, 11.00-12.00
#சந்திராஷ்டமம்
#உத்திரம்
#தினசரி ராசி பலன்
#மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்கு விருத்தியாவதுடன், வாடிக்கையாளர்களிடையே நன்மதிப்பும் ஏற்படும். உத்யோகஸ்தர்களுக்கு நீண்ட காலம் எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி தொலைபேசி மூலம் இல்லம் வந்தடையும். பிரிந்த உறவுகளை நீங்கள் எடுத்த முயற்சியின் காரணமாக, இணையும்படி செய்துவிடுவீர்கள். குடும்ப நிலையைப் பொறுத்தவரை கணவன் – மனைவி இடையே கருத்து ஒற்றுமை ஏற்பட்டு, இல்லறம் இனிக்கும். இனிய ஒரு பயணம் செல்ல ஏற்பாடு செய்வீர்கள். அது ஆன்மிகப் பயணமாகவோ, சுற்றுலாவாகவோ இருக்கலாம். அதை தவிர்க்க இயலாத நிலையில் உருவாகும்போது, தடைகளும் வந்து சேரலாம். உடல்நலம் சற்று தொல்லை தரக்கூடும். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
#ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூட்டாளிகளை எந்த காரணம் கொண்டும் பகைத்துக் கொள்ள வேண்டாம். அது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. கலைஞர்கள் மிகவும் புகழ் வாய்ந்த நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கப் பெற்று, உற்சாகமாக பணியாற்றுவார்கள். சகக் கலைஞர்கள் சிலருக்கு உதவி செய்வீர்கள். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. ஒரு சிலர் விருந்துகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியில் திளைப்பார்கள். குடும்ப நிலையைப் பொறுத்தவரை கணவன் – மனைவி இடையே இனிய சூழல் நிலவி வரும். சிறு விஷயங்களில் வாக்குவாதம் உண்டாவதைத் தவிர்ப்பது நல்லது. நெடுந்தூரத்தில் இருந்து நற்செய்தி ஒன்று வரக்கூடும். பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடுவீர்கள். அதன் மூலம் சில நன்மைகளையும் பெறுவீர்கள்.
#மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் கணவன் – மனைவி இடையே சுமுகமான சூழல் நிலவும். ஒரு சிலருக்கு மனக் கசப்புகளும் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரத்தில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் சுமுகமாக நடந்துகொள்ளுங்கள். எந்த ஒரு காரியத்தையும் அவர்களோடு ஆலோசித்தே செய்யுங்கள். மாணவர்கள் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவார்கள். மின்சாரம், நெருப்பு போன்றவற்றில் பணியாற்றுவோர் எச்சரிக்கையாக இருங்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான ஒரு பிரச்சினை முடிவுக்கு வரும். அதிக லாபத்தை எதிர்பார்க்க இயலாது. என்றாலும் பிரச்சினை தீருவதால் மன அமைதி கிடைக்கும்
#கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெண்கள் திருப்தியடையும் நிலையில் சம்பவங்கள் நடைபெறும். கணவன் – மனைவி இடையே குதூகலத்துக்குக் குறைவிருக்காது. குடும்பத்தில் யாருக்கேனும் ஒருவருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். தூரத்து உறவினர் உதவி கேட்டு உங்களை தேடிவரக்கூடும். ஒரு பயணத்தை நீங்கள் மேற்கொள்ள நேரலாம். நீண்ட காலம் முயற்சித்த ஒரு விஷயம் கைகூடும். எதிர்பாராத ஆன்மிகப் பயணம் ஒன்று மேற்கொள்ள சிலர் திட்டமிடுவீர்கள். வேலை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும்.
#சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை மகிழ்ச்சியைத் தரும். சிலருக்கு மனக்குறை ஏற்படும். பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்க எடுத்த முயற்சி வெற்றியாகும். மகானின் தரிசனம் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணப்பேச்சு ஒரு நல்ல திருப்பத்தை உண்டு செய்யும். கல்விக்காக வெளிநாடு செல்ல எடுத்த முயற்சி தோல்வியை தரும். வயதானவர்களின் ஆரோக்கியம் சீராகும். அரசு வழி நன்மைகள் தாமதமாகும். சிறு பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். வேலை மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.
#கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்- மனைவி இடையே சுமுகமான போக்கு இருந்து வரும். பெண்கள் நினைத்ததைச் சாதிப்பீர்கள். சகோதரன் அல்லது சகோதரி வழியில் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சரியாகும். கலைத்துறையில் ஈடுபட்டுள்ளோருக்கு, வெளிநாட்டுப் பயணம் ஒன்று ஏற்பட வாய்ப்புண்டு. கல்வியில் தேக்க நிலை ஏற்பட்ட மாணவர்களுக்கு நல்ல திருப்பங்கள் உருவாகும். சிலருக்கு, இதுவரையான சேமிப்பு சுபகாரியத்திற்கு செலவழியும். தெய்வீகப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு, முக்கிய மனிதர்களின் சந்திப்பு நல்ல திருப்பத்தைத் தரும்.
#துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மாணவர்களின் சுறுசுறுப்பு குறையும். அக்கம்பக்கம் உள்ளவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதன் மூலம், சில தேவையற்ற சிக்கல்கள் ஏற்படலாம். எனவே கவனமாக இருங்கள். வியாபாரிகளுக்கு தொழில் நல்ல முறையில் நடந்தாலும், வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் நிலுவை நிற்கும். கலைஞர்கள் ஓரிரு சிறு வாய்ப்புகளைத் தவிர பெரிதாக ஒன்றையும் எதிர்பார்க்க இயலாது. கணவன்- மனைவி இடையே சிறு சிறு சச்சரவுகளைத் தவிர, பெரும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. குடும்பத்தில் முதியவர்களுக்கு வைத்தியச் செலவு ஏற்படக்கூடும். நீண்ட காலம் சந்திக்க நினைத்த ஒரு நல்ல நபரின் சந்திப்பு ஒரு பிரச்சினையைத் தீர்க்க உதவும்.
#விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் – மனைவி இடையே எந்தவிதப் பிரச்சினைகளும் எழ வாய்ப்பில்லாத வகையில், பரஸ்பர ஒத்துழைப்பு காணப்படும். பெற்றோரின் பாராட்டுகளைப் பெறும் வகையில், மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரிகளில் எல்லாப் பிரிவினருக்குமே, எதிர்பார்த்த அளவில் வியாபாரம் நடக்காதது குறையாகவே தெரியும். எனினும் ஓரிரு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் யாராவது சிலருக்கு மருத்துவச்செலவு ஏற்படக்கூடும். உறவினர்களின் வருகையால் பெரிய நன்மை ஒன்று ஏற்படும் வாய்ப்புள்ளது. பழைய பகை மறையும். கோர்ட்டு வழக்கு சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். தொலைந்த பொருள் ஒன்று கிடைக்கும். பெற்றோர், தங்களது பிள்ளைகளை கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியம். ஒரு சிலருக்கு பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்து சேரும்.
#தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெண்களுக்கு மனநிறைவு ஏற்படும் வகையில், பல சம்பவங்கள் நடைபெறும். ஆனாலும் அவர்களின் மனதில் ஏதோ ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு சுபச்செய்திகள் வாய்க்கும் நிலை ஏற்படும். குடும்ப நிலையைப் பொறுத்தவரை கணவன் – மனைவி இடையே கனிவும், பரிவும் காணப்படும். மகன் அல்லது மகளின் திருமணப் பேச்சுவார்த்தையை தொடங்குவீர்கள். பழைய நண்பர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு சிறு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். ஆன்மிகப் பயணம் அல்லது இன்ப சுற்றுலா சென்றுவர திட்டமிடுவீர்கள். பிள்ளைகளால் சிலருக்கு பிரச்சினைகள் வரலாம். அவர்களை உங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.
#மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாட்கள் வராத பணம் வசூலாகும். பெண்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ளும் வகையிலேயே, பல்வேறு சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு தீயினால் சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே நெருப்பு சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கவனமாக இருங்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன் – மனைவி இடையே அனுசரணையான போக்கே நீடித்து வரும். பழைய நண்பர் ஒருவரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படும். புனிதப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் நின்று போயிருந்த கட்டிடப் பணிகள் முழுமை பெறும். செலவினங்களை சமாளிக்க அது கைகொடுக்கும். விலகிச் சென்றவர்கள் கூட விரும்பி வீடு தேடி வருவர்.
# கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெண்கள் எல்லா வகையிலும் திருப்தியடையக் கூடிய வகையில் சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன் – மனைவி இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறையும். குடும்பத்தில் குதூகலமும் நிலவி வரும். திருமண விருந்து, விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்புண்டு. வடமேற்கு திசையில் ஒரு பயணம் அமையும். புதிய ஆடை அணிமணிகள் சேர்க்கை உண்டு. தெய்வீகத் தலங்களுக்குச் சென்று வருவது மனநிம்மதியைத் தரக்கூடும். எழுத்துத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பலரும் பிரகாசிப்பீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு, ஓரளவு லாபம் வந்துசேரும்.
#மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் சம்பந்தமான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிய வாய்ப்பிருக்கிறது. எதிலும் அவசர முடிவு வேண்டாம். வீடு, மனை விற்பனையில் நிதானம் தேவை. கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு, இது ஒரு சோதனையான காலம்தான். எனினும் பொறுமையாக இருங்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதை தவிர்த்துவிடுவது நல்லது. பெண்கள் குடும்ப உறுப்பினர்களுடன், அனுசரணையாக நடந்து கொள்வர். அதன் மூலம் பல பிரச்சினைகள் தவிர்க்கப்படும். கணவன் – மனைவி இடையே சுமுகமான உறவு நிலவி வரும். ஆனாலும் அவ்வப்போது சிறு சிறு சச்சரவுகள் தலைகாட்டவே செய்யும். எனவே இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.
What's Your Reaction?