இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(14-06-2020)

இன்றைய ராசி பலன்கள்,இன்றைய பஞ்சாங்கம்,astrology,சோதிடம்,ஜோதிடம்,என் ஜோதிடம்,rasi palan ,today rasipalan,ராசிபலன்,jothidam,மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம்,அதிர்ஷ்ட திசை ,அதிர்ஷ்ட எண் ,அதிர்ஷ்ட நிறம்

Jun 14, 2020 - 01:03
 0  194
இன்றைய நாள் எப்பிடி-ஞாயிற்றுகிழமை(14-06-2020)

இன்றைய(2020.06.14) நாளுக்கான பஞ்சாங்கமும், இராசி பலன்களும்


இன்றைய  பஞ்சாங்கம்

14-06-2020, வைகாசி 32, ஞாயிற்றுக்கிழமை, 
நவமி திதி பின்இரவு 03.20 வரை பின்பு தேய்பிறை தசமி. 
உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 12.21 வரை பின்பு ரேவதி. 
நாள் முழுவதும் அமிர்த யோகம். 
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. 
சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, 
எம கண்டம் – பகல் 12.00 – 01.30, 
குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, 

சுப ஹோரைகள் – 
காலை 7.00 – 9.00, 
பகல் 11.00 – 12.00 , 
மதியம் 02.00 – 04.00,  
மாலை 06.00 – 07.00, 
இரவு 09.00 – 11.00,

இன்றைய ராசிப்பலன் –  14.06.2020


மேஷம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.


ரிஷபம்


இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் அனுகூலம் உண்டாகும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும்.


மிதுனம்


இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பெரியவர்களுடன் நட்பு ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.


கடகம்


இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். நெருங்கியவர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்பாராத உதவிகளால் பண தேவைகள் பூர்த்தியாகும்.


சிம்மம்


இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. மற்றவர்கள் விஷயத்தில் தலையீடாமல் இருப்பது நல்லது.


கன்னி


இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.


துலாம்


இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமான பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை தரும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும்.


விருச்சிகம்


இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படலாம். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும்.  அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் உதவியால் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.


தனுசு


இன்று பிள்ளைகளிடம் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.


மகரம்


இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். தரும காரியங்கள் செய்வதில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.


கும்பம்


இன்று உங்களுக்கு வெளியிலிருந்து வரவேண்டிய பணவரவில் சில தடை தாமதங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.


மீனம்


இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்கள் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சியை அளிக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow