இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(15-04-2020)

இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(15-04-2020)

இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(15-04-2020)

#இன்றையபஞ்சாங்கம்

15-#ஏப்ரல்-2020
#சூரியோதயம்    : 6:10 am #சந்திரௌதயம்   : 12:52 AM
#சூரியாஸ்தமனம் : 6:28 pm #சந்திராஸ்தமனம் : 12:31 PM
#சூரியன்ராசி   : மேஷம்
#சந்திரன்ராசி  :   மகரம்
#மாதம்    : சித்திரை 2ம் நாள்  
#பக்ஷம்    : கிருஷ்ண பக்ஷம்

#பஞ்சாங்கம்

1️⃣,#வாரம்  : அறிவன் (புதன்)

2️⃣,#திதி     : அஷ்டமி இறுதி 04:51 pmm நவமி

3️⃣,#நட்சத்திரம் : உத்திராடம் இறுதி 09:04 pm திருவோணம்

4️⃣,#யோகம்    : சித்தம் இறுதி 05:32 pm சாத்தீயம்

5️⃣,#கரணம்    :கௌலவம் 04:51 pm சைதுளை

��#நல்ல_நேரம்��     

அபிஜித்       : 11:55 am – 12:44 pm

அமிர்த காலம்     : 02:18 pm – 03:59 pm

ஆனந்ததி யோகம் : 08:43 pm Mudgar

☻#கெட்ட_நேரம்☻ 

ராகுகாலம்   : 12:26 PM – 1:42 PM

யம கண்டம் : 8:35 AM – 9:52 AM

தியாஜ்யம்   : 04:09 am – 05:51 am

குளிகன்      : 11:09 AM – 12:26 PM

#துர்முஹுர்த்தம் 

1. 12:05 PM – 12:46 PM

#அமிர்தயோகம் இரவு 09.04 வரை பின்பு #சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை  தவிர்க்கவும்.

#சுப_ஹோரைகள் 
காலை 06.00-07.00, 
காலை 09.00-10.00,  
மதியம் 1.30-2.00,  
மாலை 04.00-05.00, 
இரவு 07.00-09.00,  11.00-12.00

#சந்திராஷ்டமம்
#மிருகசீரிஷம்
#திருவாதிரை

#மேஷம் 
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எனினும் பயணங்களில் எச்சரிக்கை தேவை. பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

# ரிஷபம் 
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். கூட்டாளிகளின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

# மிதுனம்
 மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதியும், சந்தோஷமும் உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் எச்சரிக்கை தேவை. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். 

#கடகம் 
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நண்பர்களின் உதவி கிட்டும். 

#சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார், உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். பயணங்களில் எச்சரிக்கை தேவை. தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். ஆடம்பரத்தை குறைத்து கொள்வது நல்லது. 

#கன்னி
 கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சுப செய்திகள் வந்து சேரும். 

#துலாம்
 துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களின் செயல்களுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும். 

#விருச்சிகம்
 விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தடைபட்ட திருமண முயற்சிகள் அனுகூலமான பலன்கள் தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும். 

#தனுசு
 தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் சிறு செயல்கள் கூட தாமதமாக முடியக்கூடும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

# மகரம் 
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் சிறு சிறு மனக்குழப்பங்கள் உண்டாகும். உடல் நிலை மந்தமாக இருக்கும். வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.

# கும்பம்
 கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தனவரவு அமோகமாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமை ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது.

# மீனம் 
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.