இன்றைய நாள் எப்பிடி-வியாழக்கிழமை(02-04-2020)

இன்றைய நாள் எப்பிடி-வியாழக்கிழமை(02-04-2020)

 0  262
இன்றைய நாள் எப்பிடி-வியாழக்கிழமை(02-04-2020)

#இன்றையபஞ்சாங்கம்

2-ஏப்ரல்-2020
சூரியோதயம்    : 6:18 am சந்திரௌதயம்   : 12:57 PM
சூரியாஸ்தமனம் : 6:27 pm சந்திராஸ்தமனம் : 02:10 AM
சூரியன்ராசி   : மீனம்
சந்திரன்ராசி  : கடகம்
மாதம்    : பங்குனி 20"ம் நாள் 
பக்ஷம்    : சுக்ல பக்ஷம்

#பஞ்சாங்கம்

1️⃣,வாரம்    : வியாழன்

2️⃣,திதி     : நவமி இறுதி 02:43 am

3️⃣,நட்சத்திரம் : புனர்பூசம் இறுதி 07:28 pm 

4️⃣,யோகம்    : அதிகண்டம் இறுதி 03:22 pm சுகர்மம்

5️⃣,கரணம்    :பாலவம் 03:17 pm 
கௌலவம் 02:43 am

��#நல்ல_நேரம்��     

அபிஜித்       : 11:58 am – 12:47 pm

அமிர்த காலம்     : 05:04 pm – 06:40 pm

ஆனந்ததி யோகம் : 07:28 pm Shubha

☻#கெட்ட_நேரம்☻ 

ராகுகாலம்   : 1:43 PM – 3:00 PM

யம கண்டம் : 7:19 AM – 8:35 AM

தியாஜ்யம்   : 07:29 am – 09:05 am

குளிகன்      : 9:52 AM – 11:09 AM

#துர்முஹுர்த்தம் 

1. 10:44 AM – 11:25 AM 
2. 02:50 PM – 03:31 PM

#அமிர்தயோகம் இரவு 07.28 வரை பின்பு #சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. #ஸ்ரீ_ராம_நவமி. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

#சுப_ஹோரைகள்  
காலை 09.00-11.00,  
மதியம் 01.00-01.30, 
மாலை 04.00-06.00,  
இரவு 08.00-09.00.

#சந்திராஷ்டமம்
#மூலம்

#மேஷம் 
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். 

#ரிஷபம் 
 ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் குறையும். 

#மிதுனம்
 மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் எதிலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் இருப்பது நல்லது. -

#கடகம் 
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெண்கள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். 

#சிம்மம்
 சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் தாமதமான பலன் கிட்டினாலும் வெற்றி உண்டாகும். சிலருக்கு வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பெண்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். 

#கன்னி
 கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி பயணங்களில் கவனம் தேவை. வீட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. 

#துலாம்
 துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். பெண்கள் அத்யாவசிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும். 

#விருச்சிகம் 
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் தாமதமானாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பு உயரும். 

#தனுசு
 தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப் பிரச்சினைகள் ஏற்படும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் கணவன், மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பயணங்களால் பிரச்சனைகள் ஏற்படும். 

#மகரம் 
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். 

#கும்பம்
 கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். 

#மீனம் 
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow