இன்றைய நாள் எப்பிடி-வியாழக்கிழமை(30-04-2020)

இன்றைய நாள் எப்பிடி-வியாழக்கிழமை(30-04-2020)

Apr 30, 2020 - 22:32
 0  116
இன்றைய நாள் எப்பிடி-வியாழக்கிழமை(30-04-2020)


#இன்றையபஞ்சாங்கம்

30-#ஏப்ரல்-2020
#சூரியோதயம்    : 6:02 am #சந்திரௌதயம்   : 11:47 AM
#சூரியாஸ்தமனம் : 6:30 pm #சந்திராஸ்தமனம் : 12:57 AM
#சூரியன்ராசி   :மேஷம்
#சந்திரன்ராசி  : கடகம்
#மாதம்  : சித்திரை 17'ம் நாள்  
#பக்ஷம்    : சுக்ல பக்ஷம்


 #பஞ்சாங்கம்

1️⃣,#வாரம்    : வியாழன்

2️⃣,#திதி     : சப்தமி இறுதி 02:39 pm அஷ்டமி

3️⃣,#நட்சத்திரம் : தை இறுதி 01:53 am

4️⃣,#யோகம்    : சூலம் இறுதி 08:09 pm கண்டம்

5️⃣,#கரணம்    :வனசை 02:39 pm 
பத்திரை 02:08 am

��#நல்ல_நேரம்��    

அபிஜித்   : 11:51 am – 12:41 pm

அமிர்த காலம்     : 07:31 pm – 09:06 pm

ஆனந்ததி யோகம் : 01:53 am amrut

☻#கெட்ட_நேரம்☻

ராகுகாலம்   : 1:43 PM – 3:00 PM

யம கண்டம் : 7:19 AM – 8:35 AM

தியாஜ்யம்   : 09:59 am – 11:34 am

குளிகன்    : 9:52 AM – 11:09 AM

#துர்முஹுர்த்தம் 

1. 10:44 AM – 11:25 AM 
2. 02:50 PM – 03:31 PM

#நாள்_முழுவதும் சித்தயோகம். 
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்

#சுப_ஹோரைகள் 
காலை 09.00-11.00,  
மதியம் 01.00-01.30, 
மாலை 04.00-06.00,  
இரவு 08.00-09.00

#சந்திராஷ்டமம்
#பூராடம்
#உத்திராடம்


இன்றைய  ராசி பலன்கள்

மேஷம்

அரசு அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். தைரியமான செயல்பாடுகளால் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். பூமி விருத்திக்கான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.


 
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5


 
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அஸ்வினி : அனுகூலமான நாள்.


 
பரணி : தன்னம்பிக்கை மேம்படும்.

கிருத்திகை : விருத்தி உண்டாகும்.

ரிஷபம்

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் மேன்மை உண்டாகும். அனைவரிடத்திலும் உங்களின் மரியாதை உயரும். கெளரவ பதவிகள் வந்தடையும். பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : எண்ணங்கள் மேம்படும்.

ரோகிணி : மேன்மை உண்டாகும்.

மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.

மிதுனம்

உறவினர்களிடம் சாதகமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். விவாதங்களில் சாதகமான சூழல் அமையும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். ஆன்மிக பயணங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மிருகசீரிஷம் : எண்ணங்கள் ஈடேறும்.

திருவாதிரை : இலாபம் உண்டாகும்.

புனர்பூசம் : சாதகமான நாள்.

கடகம்

கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமற்ற சூழல் ஏற்படும். தொழில் அபிவிருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். வாழ்க்கைத் துணைவரிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

பூசம் : அபிவிருத்தி உண்டாகும்.

ஆயில்யம் : வாதத்தை தவிர்க்கவும்.

சிம்மம்

வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான காரியங்களில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : பெருமை உண்டாகும்.

பூரம் : இன்னல்கள் நீங்கும்.

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

கன்னி

நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : காரியங்கள் ஈடேறும்.

அஸ்தம் : கவனம் வேண்டும்.

சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

துலாம்

தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்பத்தில் பொருளாதார மேன்மை உண்டாகும். குலதெய்வ வழிபாடு தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : இலாபம் உண்டாகும்.

சுவாதி : ஆசிகள் கிடைக்கும்.

விசாகம் : எண்ணங்கள் மேம்படும்.

விருச்சிகம்

அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் வரும். நிறுவனங்களில் சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். ஆபரணச் சேர்க்கைக்கான செயல்திட்டத்தை வகுப்பீர்கள். கடிதத்தின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். புதிய வேலைக்கான முயற்சிகள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : அனுகூலமான நாள்.

அனுஷம் : புகழ் உண்டாகும்.

கேட்டை : முயற்சிகள் ஈடேறும்.

தனுசு

குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மை அளிக்கும். புதுவிதமான எண்ணங்களால் வீண் அலைச்சல்கள் மற்றும் குழப்பங்கள் நேரிடலாம். நிதானமான செயல்பாடுகளால் செல்வாக்கு உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : நிதானம் வேண்டும்.

பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் : செல்வாக்கு உயரும்.

மகரம்

கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். மனக்கவலைகள் குறைத்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். தலைமைப் பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும். பொருளாதார மேன்மைக்கான சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.

திருவோணம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

அவிட்டம் : சிந்தனைகள் மேலோங்கும்.

கும்பம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான இடப்பெயர்ச்சி உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அமைதியுடன் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.

சதயம் : இடப்பெயர்ச்சி உண்டாகும்.

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

மீனம்

பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் சுபவிரயம் உண்டாகும். முத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். இணையம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : நன்மை உண்டாகும்.

உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow