இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(29-04-2020)

இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(29-04-2020)

 0  134
இன்றைய நாள் எப்பிடி-புதன்கிழமை(29-04-2020)

#இன்றையபஞ்சாங்கம்

29-#ஏப்ரல்-2020
#சூரியோதயம்    : 6:03 am #சந்திரௌதயம்   : 10:50 AM
#சூரியாஸ்தமனம் : 6:30 pm #சந்திராஸ்தமனம் : 12:04 AM
#சூரியன்ராசி   : மேஷம்
#சந்திரன்ராசி  :   கர்க்கடகம்
#மாதம்  : சித்திரை 16'ம் நாள்   
#பக்ஷம்    : சுக்ல பக்ஷம்

 #பஞ்சாங்கம்

1️⃣,#வாரம்  : அறிவன்(புதன்)

2️⃣#திதி     : சஷ்டி இறுதி 03:12 pm சப்தமி

3️⃣#நட்சத்திரம் : புனர்பூசம் இறுதி 02:02 am

4️⃣#யோகம்    : திருதி இறுதி 09:48 pm சூலம்

5️⃣#கரணம்    :சைதுளை 03:12 pm 
கரசை 03:00 am

#நல்ல_நேரம்    

அபிஜித்   : 11:52 am – 12:41 pm

அமிர்த காலம்     : 11:34 pm – 01:12 am

ஆனந்ததி யோகம் : 02:02 am Matanga

#கெட்ட_நேரம்

ராகுகாலம்   : 12:26 PM – 1:42 PM

யம கண்டம் : 8:35 AM – 9:52 AM

தியாஜ்யம்   : 13:47 pm – 15:25 pm

குளிகன்   : 11:09 AM – 12:26 PM

#துர்முஹுர்த்தம்  

1. 12:05 PM – 12:46 PM

#நாள்_முழுவதும் #சித்தயோகம். 
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

#சுப_ஹோரைகள் 
காலை 06.00-07.00, 
காலை 09.00-10.00,  
மதியம் 1.30-2.00,  
மாலை 04.00-05.00, 
இரவு 07.00-09.00,  11.00-12.00

பொது வாழ்க்கை தொடரும் பொழுது பொது 
ராசிபலன்கள் தொடரும் 

#சந்திராஷ்டமம்
#மூலம்
#பூராடம்

 இன்றைய ராசி பலன்

#மேஷம் 
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். குடும்பத்தில் பெற்றோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். ஆடம்பரத்தை குறைத்து கொள்வது நல்லது.


# ரிஷபம் 
 ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் சில தடங்கலுக்குப் பின் வெற்றியை தரும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 

#மிதுனம்
 மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு வாகன வகையில் பிரச்சனைகள் ஏற்படலாம். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் தாமத பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். 

#கடகம்
 கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். தடைப்பட்ட திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவீர்கள். 

#சிம்மம் 
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் செய்யும் செயல்களில் தாமத பலன்கள் கிட்டும். உத்தியோக ரீதியான பிரச்சினை சற்று குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

#கன்னி
 கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் ரிதியாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை. 

#துலாம்
 துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.

# விருச்சிகம்
 விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய வியாபாரம் துவங்கும் வாய்ப்புகள் உருவாகும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

# தனுசு
 தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உங்களுக்கு உள்ள நெருக்கடி சற்று குறையும். பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும்.

# மகரம்
 மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வியாபார ரீதியான வங்கி கடன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். 

#கும்பம்
 கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். எனினும் உங்களின் விடா முயற்சிக்கு உரிய பலன்கள் கிட்டும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும்.

 #மீனம் 
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். பயணங்களில் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow