இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்க்கிழமை(28-04-2020)

இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்க்கிழமை(28-04-2020)

Apr 28, 2020 - 01:09
 0  201
இன்றைய நாள் எப்பிடி-செவ்வாய்க்கிழமை(28-04-2020)


#இன்றைய_பஞ்சாங்கம்

 சித்திரை . ~15(28.04.2020) செவ்வாய்க்கிழமை.
வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ *உத்தராயணம் .
ருது~வசந்த ருதௌ.
மாதம்~சித்திரை ( மேஷ மாஸம்)
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம் *பிற் பகல் 12.23 வரை


 
திதி: பஞ்சமி பிறகு சஷ்டி.
ஸ்ரார்த்த திதி ~ சஷ்டி.
நாள் ~ செவ்வாய்க்கிழமை ( பௌம வாஸரம்)
நக்ஷத்திரம்: திருவாதிரை (ஆர்த்ரா) இரவு 10.36 வரை பிறகு புனர்பூசம் (புனர்வஸூ).
யோகம் ~இரவு 10.36 வரை மரண யோகம் பிறகு சித்த யோகம்.

நல்ல நேரம் ~ 10.30~11.30 AM & 04.30~ 05.30 PM .
ராகு காலம்~ மாலை 03.00~04.30
எமகண்டம்~ காலை 09.00~10.30
குளிகை ~ மாலை 12.00 ~ 01.30.


 
சூரிய உதயம்~ காலை 06.07 AM.
சூரிய அஸ்தமனuம்~ மாலை 06.20 PM.
குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும்.
சந்திராஷ்டமம்~ கேட்டை, மூலம்.
சூலம்~ வடக்கு.
‌இன்று ~ ஸ்ரீராமானுஜர் ஜயந்தி.

இன்றைய (28-04-2020) ராசி பலன்கள்

மேஷம்


 
செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். பணியில் உள்ள எஞ்சிய பணிகளை செய்து முடிப்பீர்கள். சங்கடமான சூழல் மறைந்து புத்துணர்ச்சியான சூழல் உண்டாகும். திறமைகளால் பணியில் பொறுப்புகள் உயரும். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


 
அஸ்வினி : வேகம் அதிகரிக்கும்.

பரணி : புத்துணர்ச்சியான நாள்.

கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் மற்றும் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் மூலம் தொழில்வழி வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். வாக்குவன்மையால் இலாபம் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். புதிய சிந்தனைகளால் ஆதாயமான பலன்கள் ஏற்படும். பழக்க வழக்கங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

கிருத்திகை : ஆதரவான நாள்.

ரோகிணி : இலாபம் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : அனுபவம் உண்டாகும்.

மிதுனம்

மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும். இளைய சகோதரர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சொத்துக்கள் விற்பனை செய்வது தொடர்பாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை : சிக்கல்கள் குறையும்.

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

கடகம்

தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுத்திறமையால் அனுகூலம் உண்டாகும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வாகனங்கள் தொடர்பான செயல்களில் நிதானம் வேண்டும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

பூசம் : மகிழ்ச்சியான நாள்.

ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

சிம்மம்

தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பிறருக்கு செய்த உதவியால் மேன்மை உண்டாகும். செலவுகளை குறைத்து சேமிப்பதில் நாட்டம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மகம் : இலாபம் கிடைக்கும்.

பூரம் : ஆசைகள் நிறைவேறும்.

உத்திரம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

கன்னி

வியாபாரம் தொடர்பான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகத்திறமை மேம்படும். உலக சுகங்களில் எதிலும் ஆர்வமின்றி இருப்பீர்கள். சபை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : திறமைகள் மேம்படும்.

அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

துலாம்

குடும்பத்தில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்கான பாராட்டுகளும் கிடைக்கும். புனித யாத்திரைக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் சம்பந்தமான புதிய நுணுக்கங்களை கற்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி : பாராட்டுகள் கிடைக்கும்.

விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

விருச்சகம்

எடுத்த செயல்களை செய்து முடிப்பதில் பல இடர்பாடுகள் தோன்றும். எதிர் வாதங்களை தவிர்ப்பதால் நற்பெயர் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்லவும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். சுரங்க தொழில் தொடர்பான பணிகளில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : இடர்பாடுகள் தோன்றும்.

அனுஷம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

கேட்டை : விழிப்புணர்வு வேண்டும்.

தனுசு

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பாராட்டுகள் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கை மற்றும் பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கூட்டாளிகளின் அனுகூலத்தால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : பாராட்டுகள் கிடைக்கும்.

பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

உத்திராடம் : மேன்மை ஏற்படும்.

மகரம்

பணியில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். தாய்மாமன் உறவுகளிடம் நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் போது பேச்சில் கவனம் வேண்டும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். சிறு தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எண்ணிய செயல்களை சிறு அலைச்சலுக்கு பின்பே செய்து முடிக்க வேண்டிய சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : நிதானம் வேண்டும்.

திருவோணம் : அனுகூலம் உண்டாகும்.

அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.

கும்பம்

புதிய யுக்திகளை பயின்று கையாளுவீர்கள். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் ஆதரவு கிடைக்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வழக்கு விவகாரங்களில் இழுபறியான நிலை உண்டாகும். கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பும், புரிதலும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

சதயம் : பாராட்டப்படுவீர்கள்.

பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.

மீனம்

பிள்ளைகளிடம் அனுசரித்து செல்லவும். நிலம் சம்பந்தமான விவகாரங்களில் உள்ள பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் தெளிவான சிந்தனைகள் மற்றும் முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பாராத சில பொருள் சேர்க்கைகள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

ரேவதி : சாதகமான நாள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow