இன்றைய நாள் எப்பிடி-வியாழகிழமை(04-11-2021)

இன்றைய நாள் எப்பிடி-வியாழகிழமை(04-11-2021)

Nov 3, 2021 - 23:49
Nov 4, 2021 - 23:29
 0  36
இன்றைய நாள் எப்பிடி-வியாழகிழமை(04-11-2021)

இன்றைய பஞ்சாங்கம்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய #தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் 

Date :#வியாழன், 04 நவம்பர் 2021

சூரிய உதயம் : 06:07
சூரிய அஸ்தமனம் : 17:38

இன்று: சந்திரௌதயம் இல்லை
சந்திர அஸ்தமனம் : 17:23

ஷகா சம்வத் : 1943 பிலவ

Lunar Month : ஐப்பசி 18

பட்சம் : கிருஷ்ண பக்ஷம்

திதி : அமாவாசை -  26:44 வரை

நட்சத்திரத்தன்று : சித்திரை - 07:43 வரை

யோகம் : ப்ரீதி - 11:11 வரை

முதல் கர்ணன் : சதுஷ்பாதம் - 16:25 வரை
இரண்டாவது கர்ணன் : நாகவம் -  26:44 வரை

சூரிய அடையாளம் : துலாம்
சந்திரன் அடையாளம் : துலாம்

அபிஜித் : 11:29 - 12:15

துர்முஹுர்த்தம் : 09:57 - 10:43
14:33 - 15:20

அமிர்தகாலம் : 21:16 - 22:42

Varjyam : 12:43 - 14:08

ராகுகாலம் : 13:19 - 14:45

குளிகை : 09:00 - 10:26

யமகண்டம் : 06:07 - 07:33

#சந்திராஷ்டமம்
ரேவதி

ராசிபலன்கள்

மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்துடன் குதுகலத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பன்மடங்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் உண்டாகும். ஆரோக்கிய பிரச்சனைகளும் தீரும்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபகாரியத் தடைகள் விலகி நல்லதொரு நாளாக அமைய இருக்கிறது. குடும்பச்சூழல் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வாக்குவாதங்கள் நீங்கி ஒற்றுமை மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். யோகத்தில் இருப்பவர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

மிதுனம்:

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளியிட பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய யோகம் உண்டு. உத்யோகத்தில் அவர்களுடைய கனவுகள் நிறைவேறும் நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உணவு கட்டுப்பாடு மேற்கொள்ளுதல் அல்லது. 

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியானதொரு நல்ல நாளாக இருக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த அளவிற்க்கான சலுகைகளை அடையப் போகிறீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும்.

சிம்மம்:

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இடமாற்றம் குறித்த விஷயங்கள் சாதகப்பலன் உண்டாகும். ஆடம்பர பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவு சிக்கல் தீர்ந்து ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அடையக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. மனைவிவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். இருப்பவர்களுக்கு புன்னகை பூத்த முகத்துடன் இருக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வகையிலான அமைப்பு என்பதால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்தது எதிர்பார்த்தபடி நடக்கும் என்பதால் குதூகலத்துடன் இருப்பீர்கள். ஆரோக்கியத்தை சற்று கவனிப்பது நல்லது.

விருச்சிகம்:

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடையும் நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்கள் குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து நற்பெயர் பெறுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் நீங்கும்.

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தை உறவினர்களின் வருகை உற்சாகம் அடைய செய்யும். வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமைய இருக்கிறது. சுய தொழில் கூட்டாளிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வு கிடைக்கும்.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைய கூடிய அமைப்பு உள்ளதால் எதிலும் துணிந்து செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய நட்பு வட்டம் விரியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு மன மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

கும்பம்:

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கணவன் மனைவிக்குள் இருந்த தடைகள் நீங்கி அன்பு பெருகும். உற்றார் உறவினர்கள் உடைய வரிசை உற்சாகம் தரும் வகையில் அமைய இருக்கிறது. குடும்பத்துடன் வெளியிடங்களுக்குப் பயணம் செய்யக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிறைவு இருக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறும் வாய்ப்புகள் அமையும்.

மீனம்:

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வராத பணம் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகள் உடைய ஆதரவைப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தை சற்று கவனியுங்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow