இன்றைய நாள் எப்பிடி-வியாழக்கிழமை(20-02-2020)

இன்றைய நாள் எப்பிடி-வியாழக்கிழமை(20-02-2020)

Feb 20, 2020 - 16:11
 0  202
இன்றைய நாள் எப்பிடி-வியாழக்கிழமை(20-02-2020)

������������������

*����ராசி பலன்கள்����*

 

*��20-02-2020⏳*

 

*��வியாழக்கிழமை��*

 

 

*��மேஷம்��*

 

 பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். திறமைக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வியாபாரம் தொடர்பான சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 1

 

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறைவேறும்

 

அஸ்வினி : ஆதாயம்  ஏற்படும்.

 

பரணி : உயர்வு உண்டாகும்.

 

கிருத்திகை :  விருப்பங்கள் நிறைவேறும்.

---------------------------------------

*��ரிஷபம்��*

 

 பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மனதில் இருந்துவந்த பயம், பதற்றம் நீங்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும்.

 

அதிர்ஷ்ட திசை :  மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் :பச்சை நிறம்

 

கிருத்திகை : எண்ணங்கள் மேலோங்கும்.

 

ரோகிணி : ஆர்வம் ஏற்படும்.

 

மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------

*��மிதுனம்��*

 

 குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அயல்நாட்டு வர்த்தகம் தொடர்பான முயற்சிகளில் நிதானம் வேண்டும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 4

 

அதிர்ஷ்ட நிறம் :  இளம் சாம்பல் நிறம்

 

மிருகசீரிஷம் : வாதங்களை தவிர்க்கவும்.

 

திருவாதிரை : சிந்தனைகள் அதிகரிக்கும். 

 

புனர்பூசம் :  நிதானம் வேண்டும்.

---------------------------------------

*��கடகம்��*

 

 உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனைவி வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும்.

 

அதிர்ஷ்ட திசை :கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் :  3

 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

 

பூசம் :  நன்மையான நாள்.

 

ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------

*��சிம்மம்��*

 

 குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இடமாற்றம் பற்றிய சுபச்செய்திகள் கிடைக்கும்.  மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

மகம் : மகிழ்ச்சியான நாள். 

 

பூரம் : தேவைகள் பூர்த்தியாகும்.

 

உத்திரம் : ஆசைகள் நிறைவேறும்.

---------------------------------------

*��கன்னி��*

 

 கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்தவும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு கட்டும் பணி தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் உங்களது திறமைகள் வெளிப்படும்.

 

அதிர்ஷ்ட திசை :  மேற்கு

 

அதிர்ஷ்ட எண் :  4

 

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

 

உத்திரம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

 

அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.

 

சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------

*��துலாம்��*

 

 சேமிப்பை உயர்த்தும் எண்ணங்கள் உருவாகும். உறவினர்களும், நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் இலாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

சித்திரை : உதவி கிடைக்கும்.

 

சுவாதி : இலாபம் அதிகரிக்கும்.

 

விசாகம் : வசதிகள் மேம்படும்.

---------------------------------------

*��விருச்சகம்��*

 

 தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.  பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மனதில் உள்ள விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு உதவும்போது கவனம் வேண்டும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை நிறம்

 

விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

 

அனுஷம் : விருப்பங்கள் நிறைவேறும். 

 

கேட்டை : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------

 

*��தனுசு��*

 

 திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். கனிவாகப் பேசி எண்ணிய காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 8

 

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

 

பூராடம் :  கருத்து வேறுபாடுகள் குறையும்.

 

உத்திராடம் : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------

 

*��மகரம்��*

 

 வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும். மனைவியின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். பழைய கடன் பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் சீராகும். 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 6

 

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்  நிறம்

 

உத்திராடம் : சாதகமான நாள்.

 

திருவோணம் : தனவரவு கிடைக்கும்.

 

அவிட்டம் : பிரச்சனைகள் சீராகும். 

---------------------------------------

 

*��கும்பம்��*

 

  உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்கும். மனதில் குழப்பமும், கவலையும் உண்டாகும். வீண் அலைச்சல்களால் மன சோர்வு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். கணவன், மனைவி உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

 

அவிட்டம் : எதிர்ப்புகள் அகலும்.

 

சதயம் : சோர்வு உண்டாகும்.

 

பூரட்டாதி :  மகிழ்ச்சி அதிகரிக்கும்.

---------------------------------------

*��மீனம்��*

 

 பயணங்களால் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.  பழைய கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் விரயங்கள் ஏற்படும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 1

 

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

பூரட்டாதி :  பிரச்சனைகள் குறையும்.

 

உத்திரட்டாதி :  வாய்ப்புகள் உண்டாகும்.

 

ரேவதி : விரயங்கள் ஏற்படும்.

---------------------------------------

����������������

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow