இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(25-01-2023)
இன்றைய நாள் பஞ்சாங்கமும் ராசிபலனும்-புதன்கிழமை(25-01-2023)

இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு – தை 11
1,*#நாள்*: புதன்கிழமை - (25.1.2023)
2,*#நட்சத்திரம்* : பூரட்டாதி
நாள் முழுவதும்பிறகு உத்திரட்டாதி
3,*#திதி* : 06:34 PM வரை சதுர்த்தி பின்னர் பஞ்சமி
4,*#யோகம்*: அமிர்த - சித்த யோகம்
5,*#கரணம்* : பத்திரை
நல்லநேரம்: காலை 11.15 - 12.00 / மாலை 4.30 - 5.30
*#புதன்கிழமை*
சுபஹோரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 - 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்
*#இன்று*:சதுர்த்தி விரதம்
கரிநாள்
நல்ல நேரம்
11:15 - 12:00 கா / AM
04:30 - 05:30 மா / PM
கௌரி நல்ல நேரம்
01:30 - 02:30 கா / AM
06:30 - 07:30 மா / PM
இராகு காலம்
12.00 - 01.30
எமகண்டம்
07.30 - 09.00
குளிகை
10.30 - 12.00
#சூலம்:வடக்கு
பரிகாரம்-பால்
#சந்திராஷ்டமம்
ஆயில்யம்+மகம்
#நாள்:கீழ் நோக்கு நாள்
#லக்னம் :மகர லக்னம் இருப்பு நாழிகை 03 வினாடி 26
சூரிய உதயம்
06:35 கா / AM
சூரிய அஸ்தமனம்
06:34 மாலை
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மேஷ ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். முன்கோபத்தை குறைப்பது நன்மை தரும். மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். புது நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கடகம்
கடக ராசி நேயர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். அடுத்தவரிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். தூர பயணங்களை சற்று தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் இன்றும் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, புதிய முயற்சிகளை தாமதமின்றி செய்யவும். வேண்டியவர்கள் தக்க சமயத்தில் கைகொடுப்பர். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும் இன்று ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவை
கன்னி
கன்னி ராசி நேயர்களே, குடும்ப சிக்கல்கள் குறையும். முக்கிய வேலைகளை தனியாளாக நின்று செய்ய முடியும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
துலாம்
துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் சின்ன சண்டை, சச்சரவுகள் வந்து போகும். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உறவினர்களால் சில நன்மைகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். உடல் நலம் மேன்மை பெரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
மகரம்
மகர ராசி நேயர்களே, குடும்பத்திற்கு ஆதரவாக செயல்படவும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். கடினமான காரியங்களை எளிதில் முடிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் பொறுப்புகள் கூடும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். எதிரிகள் பலம் இழந்து போவர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்கள் புரியவரும்.
மீனம்
மீன ராசி அன்பர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் இருக்கும்.