இன்றைய நாள் எப்பிடி-வெள்ளிக்கிழமை(01-05-2020)

இன்றைய நாள் எப்பிடி-வெள்ளிக்கிழமை(01-05-2020)

Apr 30, 2020 - 22:40
 0  150
இன்றைய நாள் எப்பிடி-வெள்ளிக்கிழமை(01-05-2020)

#இன்றையபஞ்சாங்கம்

*பஞ்சாங்கம் ~ சித்திரை . ~18(01.05.2020) வெள்ளிக்கிழமை.
வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ *உத்தராயணம் .
ருது~வசந்த ருதௌ.
மாதம்~சித்திரை ( மேஷ மாஸம்)
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்


 
திதி: – காலை 08.53 வரை அஷ்டமி பிறகு நவமி.
ஸ்ரார்த்த திதி ~ நவமி .
நாள் ~ வெள்ளிக்கிழமை ( ப்ருஹு வாஸரம்)
நக்ஷத்திரம்: ஆயில்யம் (ஆஸ்லேஷா) இரவு 08.45 வரை பிறகு மகம் (மகா). *யோகம்~ நாள் முழுவதும் மரண யோகம்.

நல்ல நேரம் ~ 09.00~10.00 AM & 04.30~ 04.30 PM .
ராகு காலம்~ காலை 10.30~12.00
எமகண்டம்~ மாலை 03.00~04.30
குளிகை ~ காலை 07.30 ~ 09.00.


 
சூரிய உதயம்~ காலை 06.07 AM.
சூரிய அஸ்தமனuம்~ மாலை 06.20 PM.
குறிப்பு : சூர்ய உதயம், அஸ்தமனம் இடத்திற்கு இடம் மாறும்.
சந்திராஷ்டமம்~ உத்திராடம், திருவோணம்.
சூலம்~ மேற்கு.
‌இன்று ~

இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய (01-05-2020) ராசி பலன்கள்


 
மேஷம்

செயல்பாடுகளில் இருந்த இடர்பாடுகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வழக்குகளில் இருந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உருவாகும். எதிர்பார்த்திருந்த கடன் உதவிகள் கிடைக்கும்.


 
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.

பரணி : இழுபறிகள் குறையும்.

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

பெரியோர்களின் ஆதரவும், ஆசீர்வாதமும் கிடைக்கும். பணி சம்பந்தமான விவகாரங்களில் முன்னேற்றமான சூழல் அமையும். செய்யும் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொருட்சேர்க்கை உண்டாகும். கண்களில் ஏற்பட்ட உபாதைகளின் வீரியம் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : ஆசிகள் கிடைக்கும்.

ரோகிணி : அனுகூலமான நாள்.

மிருகசீரிஷம் : வீரியம் குறையும்.

மிதுனம்

வீடு, மனைகளால் சேமிப்பு அதிகரிக்கும். மூத்த சகோதர, சகோதரிகள் ஆதரவாக செல்படுவார்கள். பொருட்களை கையாளும் போது மிகுந்த கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் தொழில் சம்பந்தமான ஆதரவு கிடைக்கும். பொருளாதார மேம்பாட்டிற்கான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : சேமிப்பு அதிகரிக்கும்.

திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.

புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும்.

கடகம்

மூத்த உடன்பிறப்புகளிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். வேள்விகளில் கலந்து கொள்வதற்கான சூழல் அமையும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் அதிகரிக்கும். மனதில் பலவிதமான சிந்தனைகளால் உடல் சோர்வும், அமைதியற்ற சூழலும் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : அமைதி வேண்டும்.

பூசம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

ஆயில்யம் : சோர்வு உண்டாகும்.

சிம்மம்

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பணிகளில் பொறுப்புகள் மற்றும் அதிகாரம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் மதிப்பு மற்றும் சிநேகிதம் உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். அறச்செயல்களால் மேன்மையுடைய நற்பேறுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : வெற்றி கிடைக்கும்.

பூரம் : முன்னேற்றமான நாள்.

உத்திரம் : நற்பேறுகள் உண்டாகும்.

கன்னி

உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். மனச்சோர்வுகளால் வேலையில் கவனமின்றி வசைச்சொற்களுக்கு ஆளாக நேரிடும். புதிய இலக்கு மற்றும் அதை செயல்படுத்துவதற்கான ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திரம் : மாற்றம் ஏற்படும்.

அஸ்தம் : கவனம் வேண்டும்.

சித்திரை : ஆதரவுகள் கிடைக்கும்.

துலாம்

ஆன்மிகம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வதால் மகிழ்ச்சி மற்றும் புகழ் உண்டாகும். புதுவிதமான தொழில்நுட்ப வித்தைகளை பயில முயல்வீர்கள். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தைவழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். பதவி உயர்வால் மதிப்புகள் உயரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : புகழ் உண்டாகும்.

சுவாதி : நுட்பங்களை பயில்வீர்கள்.

விசாகம் : மதிப்புகள் உயரும்.

விருச்சகம்

செய்தொழிலில் மேன்மையான நிலை உண்டாகும். புதிய ஆபரணங்கள் வாங்குவதற்கான முயற்கள் கைகூடும். பட்டயக்கல்வி பயிலும் மாணவர்களின் கலை சார்ந்த அறிவு மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : மேன்மை உண்டாகும்.

அனுஷம் : அறிவு மேம்படும்.

கேட்டை : இலாபம் கிடைக்கும்.

தனுசு

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படுவதால் தேவையற்ற வசைச்சொற்களை தவிர்க்கலாம். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிகளில் சாதகமற்ற சூழல் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மூலம் : நிதானம் வேண்டும்.

பூராடம் : சாதகமற்ற நாள்.

உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

மகரம்

கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு எண்ணிய இலாபம் உண்டாகும். பயணங்களால் சில விரயச் செலவுகள் ஏற்படும். கேளிக்கைகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வேலை செய்யும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : இலாபம் உண்டாகும்.

திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

கும்பம்

புதிய உறுப்பினர்களின் வருகை உண்டாகும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு பணி சம்பந்தமான கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர்கல்வி பயில்பவர்களின் திறமைகளுக்கான அங்கீகாரம் மற்றும் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சதயம் : வாதங்களை தவிர்க்கவும்.

பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்

தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எண்ணிய எண்ணங்களில் காரியசித்தி உண்டாகும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : ஒற்றுமை மேம்படும்.

உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

ரேவதி : மகிழ்ச்சியான நாள்.
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow